Home உலகம் கார் இல்லை… சாலை இல்லை… தெருக்கள் இல்லை - அல்டிமேட் ட்ரீம் சிட்டியை உருவாக்கும் சவுதி!

கார் இல்லை… சாலை இல்லை… தெருக்கள் இல்லை – அல்டிமேட் ட்ரீம் சிட்டியை உருவாக்கும் சவுதி!

உலகின் மிகப் பெரிய கச்சா எண்ணெய் தயாரிப்பாளரான சவுதி அரேபியாவில் கார் இல்லாத நகரம் நகரம் உருவாகவிருப்பது உலகளாவிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மாற்றத்திற்கான முதல் அடியை எடுத்துவைத்துள்ள சவுதி அரேபியா 2030ஆம் ஆண்டுக்குள் இந்நகரத்தை உருவாக்கவிருக்கிறது.

உலக வெப்பமயமாதலைத் தடுப்பதற்காக பல்வேறு நாடுகளும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை மேம்படுத்துவதில் மிக முக்கிய கவனம் செலுத்திவருகின்றன. கச்சா எண்ணெயை நம்பியே இருக்க முடியாது என்பதால் அதற்கு மாற்றாக உலக நாடுகள் பசுமை ஹைட்ரஜனை எரிபொருளை உருவாக்கும் வேலையில் முனைப்புடன் செயல்பட்டுவருகின்றன.

இதில் மும்முரமாக ஈடுபடுவது கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் கொடிகட்டி பறக்கும் சவுதி அரேபியா தான். வெப்பமயமாதலுக்கு காரணமான கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கும் மற்றொரு நோக்கத்திலும் சவுதி அரேபியா செயல்பட்டுவருகிறது.

அந்த வகையில் செங்கடலை ஒட்டிய வடமேற்கு சவுதி அரேபியா பாலைவனப் பகுதியில் நியோம் (New future-NEOM City) என்ற எதிர்கால நகரை உருவாக்கும் திட்டத்தை 2017ஆம் ஆண்டு அந்நாட்டு பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் முன்மொழிந்தார்.

அந்த திட்டத்தினை செயல்படுத்தும் விதமாக, தற்போது அதன் பகுதியை ’தி லைன்’ (The Line) என்ற பெயரில் இளவரசர் அறிவித்துள்ளார். இந்த நகரம் சுமார் 170 கிமீ பரப்பளவில் அமைய உள்ளதாக விளக்கம் அளித்துள்ளார்.

இதற்காக வெளிநாடுகளில் இருந்து முதலீடுகள் திரட்டப்படும் என்றும், சவுதி அரேபியா மற்றும் அன்னிய முதலீடு என, அடுத்த 10 ஆண்டுகளில் 50 ஆயிரம் கோடி டாலர் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 26,500 சதுர கிமீ பரப்பளவில் முற்றிலும் கார்பன் (zero corbon) இல்லாத புதுப்பிக்கத்தக்க ஆற்றலைக் கொண்டு இந்நகரம் அமைக்கப்படவிருக்கிறது.

இந்த நகரத்தில் சுமார் 10 லட்சம் குடியிருப்புகள் அமைக்கப்படும் என்றும், இந்த நகரம் 2030ஆம் ஆண்டுக்குள் முழு செயல்பாட்டுக்கு வரும் என்றும் சவுதி இளவரசர் கூறியுள்ளார்.

கார்பன் வெளியேற்றத்தைத் தடுக்கும் நோக்கில் இந்நகரத்தில் தெருக்கள் கிடையாது கார்கள் இயக்கப்படாது, சாலைகள் அமைக்கப்படாது என்று (zero cars, zero streets, zero emissions) தெரிவித்துள்ளார். நம்முடைய வளர்ச்சிக்காக இயற்கையைப் பலியாக்கக் கூடாது என்று இளவரசர் பேசியது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

எனினும், நகருக்குள் 20 நிமிடங்களுக்கு மேல் எந்தப் பயணமும் இல்லாத வண்ணம் அதிநவீன போக்குவரத்துக்கான வருங்கால தொழில்நுட்ப தீர்வு கண்டறியப்படும் என்று விளக்கியுள்ளார்.

இந்த நகர உருவாக்கத்தின்போது சுமார் 3 லட்சத்து 80 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். இந்த நகருக்கான உள்கட்டமைப்பு பணிகளுக்கு சுமார் 10 ஆயிரம் கோடி டாலர் முதல் 20 ஆயிரம் கோடி டாலர் செலவாகும் என்றும் சவிதி இளவரசர் குறிப்பிட்டுள்ளார்.

இவைனைத்தும் இளவரசரின் கனவுத் திட்டம் என்பது தான் இத்திட்டத்தின் சிறப்பம்சம். உலகம் மாற்று எரிசக்தியை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதால், கச்சா எண்ணெயை மட்டுமே நம்பியிருக்கும் சவுதியின் பொருளாதாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கில் நியோம் சிட்டி திட்டத்தைக் இளவரசர் கையிலெடுத்தது கவனிக்கத்தக்கது.

மாவட்ட செய்திகள்

Most Popular

27-1-2021 தினப்பலன் – ஐந்து ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் மோதல் போக்கு நிலவும்!

சார்வரி வருடம் I தை 14 I புதன் கிழமை I ஜனவரி 27, 2021 இன்றைய ராசி பலன்!

லாக்டவுனில் இந்திய கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு 35 சதவீதம் அதிகரிப்பு.. 14 கோடி ஏழைகளுக்கு ரூ.1 லட்சம் வழங்கலாம்

கொரோனா வைரஸ் காரணமாக அமல்படுத்தப்பட்ட லாக்டவுன் காலத்தில் அம்பானி உள்ளிட்ட இந்திய கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு ரூ.12.97 லட்சம் கோடி அதிகரித்துள்ளது. இதனை பிரித்து 14 கோடி ஏழைகளுக்கு தலா...

விவசாயிகள், தொழிலாளர்கள் இந்திய குடியரசின் பலம்… விவசாயிகளின் போராட்டத்துக்கு காங்கிரஸ் ஆதரவு..

விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள்தான் இந்திய குடியரசின் பலம் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. வேளாண் சட்டங்களை எதிர்த்தும் அவற்றை ரத்து செய்யக்கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள...

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ்-இடதுசாரிகள் தீவிரம்… முதல் கட்டமாக 77 தொகுதிகளுக்கு உடன்பாடு..

மேற்கு வங்கத்தில் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற 77 தொகுதிகளிலும் மீண்டும் போட்டியிட காங்கிரஸ்-இடதுசாரிகள் இடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் 294 உறுப்பினர்களை...
Do NOT follow this link or you will be banned from the site!