ஜியோவை மொய்த்த வெளிநாட்டு நிறுவனங்கள்….கடனை அடைக்க பணம் ரெடி…. முகேஷ் அம்பானி குஷி…

 

ஜியோவை மொய்த்த வெளிநாட்டு நிறுவனங்கள்….கடனை அடைக்க பணம் ரெடி…. முகேஷ் அம்பானி குஷி…

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கு சுமார் ரூ.1.61 லட்சம் கோடி நிகர கடன் உள்ளது. 2021 மார்ச் மாதத்துக்குள் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமான கடன் இல்லா நிறுவனமாக மாறும் என முகேஷ் அம்பானி முதலில் தெரிவித்து இருந்தார். சொன்னதை செயலிலும் காட்டி வருகிறார். கடனை அடைக்க பல வழிகளில் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார். இதனால் இந்த ஆண்டு இறுதிக்குள்ளே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கடன் இல்லா நிறுவனம் எட்டி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜியோவை மொய்த்த வெளிநாட்டு நிறுவனங்கள்….கடனை அடைக்க பணம் ரெடி…. முகேஷ் அம்பானி குஷி…

கடனை அடைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக முகேஷ் அம்பானி ஜியோவின் குறிப்பிட்ட சதவீத பங்குகளை விற்பனை செய்து பணத்தை திரட்டி வருகிறார். முதலில் கடந்த ஏப்ரல் 22ம் தேதியன்று பேஸ்புக் நிறுவனம் ஜியோவின் 9.99 சதவீத பங்குகளை ரூ.43,547 கோடிக்கு வாங்கியது. அதனை தொடர்ந்து சில்வர் லேக் நிறுவனம், தனியார் முதலீட்டு நிறுவனமான விஸ்தா, ஜெனரல் அட்லாண்டிக், கே.கே.ஆர். நிறுவனம், ஜெனரல் அட்லாண்டிக், கே.கே.ஆர்., டி.பி.ஜி., மற்றும் எல் கேட்டர்டன் ஆகியவை ஜியோவின் குறிப்பிட்ட சதவீத பங்குகளை வாங்கின.இந்நிலையில் சவுதி அரேபியாவின் பப்ளிக் இன்வெஸ்மெண்ட் பண்ட் (பி.ஐ.எப்.) ஜியோவில் ரூ.11,367 கோடி முதலீடு செய்கிறது என ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அறிவித்துள்ளது. பி.ஐ.எப். நிறுவனம் தனது முதலீட்டுக்கு பதிலாக ஜியோவின் 2.32 சதவீத பங்குகளை வாங்குகிறது.

ஜியோவை மொய்த்த வெளிநாட்டு நிறுவனங்கள்….கடனை அடைக்க பணம் ரெடி…. முகேஷ் அம்பானி குஷி…

இதனையடுத்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கடந்த 9 வாரங்களுக்குள் ஜியோவின் பங்கு விற்பனை வாயிலாக ஒட்டு மொத்த அளவில் ரூ.1.15 லட்சம் கோடி திரட்டி விட்டது. இது தவிர, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அண்மையில் உரிமை பங்கு வெளியீடு மேற்கொண்டது. இதன் மூலம் சுமார் ரூ.53 ஆயிரம் கோடிக்கு மேல் கிடைக்கும். இதில் 75 சதவீதத்தை கடனை அடைக்க முகேஷ் அம்பானி திட்டமிட்டுள்ளார். ஆக, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் கடனை அடைக்க முகேஷ் அம்பானிக்கு இன்னும் சில ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே தேவை.