மெக்கா – உம்ரா யாத்திரைக்கு மீண்டும் அனுமதி! இஸ்லாமியர்கள் மகிழ்ச்சி

 

மெக்கா – உம்ரா யாத்திரைக்கு மீண்டும் அனுமதி! இஸ்லாமியர்கள் மகிழ்ச்சி

சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு புனிதப் பயணம் மேற்கொள்வது மீண்டும் தொடங்கியுள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக மெக்கா கடந்த மார்ச் மூடப்பட்டது. இதனால் ஹஜ் பயணம் மேற்கொள்ள முடியாமல் இஸ்லாமியர்கள் வேதனையில் ஆழ்ந்தனர். கிட்டத்தட்ட 5 மாதங்களாக புனித யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

மெக்கா – உம்ரா யாத்திரைக்கு மீண்டும் அனுமதி! இஸ்லாமியர்கள் மகிழ்ச்சி

மெக்கா – உம்ரா யாத்திரை மேற்கொள்ள அக்.4ம் தேதி முதல் அனுமதி அளிக்கப்படவிருப்பதாக சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளது. சவுதியில் வசிப்பவர்களுக்கு மட்டும் உம்ரா யாத்திரைக்கு அனுமதிக்கப்படுவர் என்றும், தினமும் 6,000 பேர் மெக்கா- உம்ரா யாத்திரைக்கு செல்லலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புனித பயணிகள் வருகையையொட்டி மெக்கா முழுவதும் தயார் நிலையில் இருக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மசூதி மற்றும் சுற்றுப் புற பகுதிகளை தூய்மை படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இதனிடையே உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களுக்கும் விரைவில் புனித யாத்திரை மேற்கொள்வதற்கான அனுமதியை வழங்க வேண்டும் என்று இஸ்லாமியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.