சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து: பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு

 

சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து: பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழப்பு 19ஆக உயர்ந்துள்ளது.

அச்சன்குளத்தில் சக்திவேல் என்பவருக்கு சொந்தமான மாரியம்மாள் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. அந்த ஆலையில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றன, இந்த சூழலில் இன்று காலை வழக்கம் போல் ஊழியர்கள் பணியாற்றிக்கொண்டிருந்தனர். உராய்வின் காரணமாக வெடி விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம் அடைந்தவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் வெடிவிபத்தில் சிக்கிய 20க்கும் மேற்பட்டோரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து: பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு

இன்று காலை நிலவரபடி, வெடி விபத்தில் 15 பேர் பலியான நிலையில், மேலும் 4 பேர் தற்போது உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த 39க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். படுகாயமடைந்தவர்கள் சிவகாசி, சாத்தூர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சாத்தூர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்து தொடர்பாக உரிமையாளர், குத்தகைதாரர்கள் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பட்டாசு ஆலை உரிமையாளர்களை 5 தனிப்படையினர் தேடி வருகின்றனர்.