சாத்தான்குளம் தந்தை-மகன் சித்ரவதை மரணம்: வழக்கு தொடர்பான அனைத்து இடங்களுக்கும் சென்று சிபிசிஐடி அதிகாரிகள் இன்று விசாரணை!

தமிழகத்தையே உலுக்கியுள்ள சாத்தான்குளம் விசாரணை கைதிகளான தந்தை - மகன் இருவரும் போலீசாரால் அடித்து கொல்லப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழகத்தையே உலுக்கியுள்ள சாத்தான்குளம் விசாரணை கைதிகளான தந்தை – மகன் இருவரும் போலீசாரால் அடித்து கொல்லப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விசாரணைக்காக போலீஸ் ஸ்டேஷன் அழைத்து செல்லப்பட்ட அவர்கள் ஆசனவாயில் ரத்தம் சொட்டிய படி உடலில் பல காயங்களுடன் இறந்தனர். இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்து வந்த உயர்நீதி மன்ற மதுரைகிளை தந்தை, மகன் உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக சாத்தான்குளம் காவல்துறையினர் மீது வழக்குப் பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது என தெரிவித்துள்ளது. முதல் தகவல் அறிக்கை மற்றும் சிசிடிவி கேமரா காட்சிகளின் முரண்பாடு இருக்கிறது. உடலில் மோசமான காயங்கள் இருந்தது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. எனவே பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது என்று கூறியுள்ளது.

இந்த வழக்கின் ஆவணங்கள் அனைத்தும் மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவின் பேரில் நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமார் அபினபு அவர்களிடமிருந்து சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் பெற்றுக்கொண்டார். இதன்படி தற்போது முதல் சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த வழக்கில் சிபிசிஐடி விசாரணை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சிபிசிஐடி ஐஜி சங்கர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் சிபிசிஐடி எஸ்பி விஜயகுமார், டிஎஸ்பி அனில் குமார் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர். வழக்கு தொடர்பான அனைத்து இடங்களுக்கும் சென்று சிபிசிஐடி அதிகாரிகள் இன்று விசாரணை நடத்த உள்ளனர். போலீசார் விடிய விடிய அடுத்ததாக மாஜிஸ்ட்ரேட்டின் அதிர்ச்சி அறிக்கை வெளியான நிலையில் விசாரணை தீவிரமடைந்துள்ளது. அரசு கட்டுப்பாட்டில் இருந்த நிலையில் சந்தேக மரணம் என சிபிசிஐடி வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் மாஜிஸ்ட்ரேட் பாரதிதாசன் இன்று காலை மீண்டும் விசாரணை நடத்துகிறார்.

Most Popular

`குளிக்கச் சென்றவர் சடலமாக கிடந்தார்!’- திருமணமான 45வது நாளில் இளம்பெண்ணுக்கு நடந்த துயரம்

திருமணமான 45-வது நாளில் குளிக்கச் சென்ற இளம்பெண் குளியலறைக்குள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் டவுன் பகுதியைச்...

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் மதிப்பும், மரியாதையும் கூடும்!

இன்றைய ராசிபலன்கள் 06-07-2020  (திங்கட்கிழமை) நல்லநேரம் காலை 6.15 முதல் 7.15 வரை மாலை 4.45 முதல் 5.45 வரை ராகுகாலம் காலை 7.30 முதல் 9 வரை எமகண்டம் காலை 10.30 முதல் 12 வரை மேஷம் பணவரவு அதிகரிக்கும். வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆதரவும்...

அடுத்தடுத்து திருப்பங்கள். பா.ஜ.க. தலைவர் நட்டாவை சந்திக்கும் சச்சின் பைலட்…பெரும்பான்மையை இழக்கும் காங்கிரஸ்

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கும் இடையே நீண்ட நாட்களாக மன கசப்பு இருந்து வந்தது. தற்போது...

மத்திய பிரதேசத்தில் காலியாகும் காங்கிரஸ் கூடாரம்… காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரதியுமான் லோதி பா.ஜ.க.வில் ஐக்கியம்..

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு நேரம் சரியில்லை என்றே தெரிகிறது. காங்கிரஸ் கட்சிக்குள் நடந்த உட்கட்சி சண்டையால், 18 ஆண்டுகளாக அந்த கட்சியின் தீவிர விசுவாசியாக இருந்த ஜோதிராதித்ய சிந்தியா அந்த கட்சியிலிருந்து...
Open

ttn

Close