சாத்தான்குளம் தந்தை,மகன் மரணம் – ஆவணங்கள் மதுரைக்கு மாற்றம்!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் உயிரிழந்த விவகாரத்தில் சிபிசிஐடி, விசாரணையைக் கையிலெடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரகு கணேஷ், எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். மேலும், அவர்கள் பாதுகாப்பு கருதி மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அதனைத்தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் சாத்தான்குள காவலர்கள் 5 பேரை கைது செய்தனர். அவர்களுள் 2 பேர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மற்ற 3 காவலர்கள் மதுரை சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டனர். இதனையடுத்து அரசு கோரிக்கை விடுத்ததின் பேரில், சிபிஐ போலீசார் வழக்கு விசாரணையை கையிலெடுத்துள்ளனர். சாத்தான்குளத்தில் நடந்த இரட்டை கொலை தொடர்பாக 7 பேர் கொண்ட சிபிஐ போலீஸ் குழு இன்று ஆலோசனை நடத்தி வருகிறது. இந்த நிலையில், இந்த வழக்குத் தொடர்பான ஆவணங்கள் தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து மதுரை முதன்மை குற்றவியல் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

Most Popular

தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 114 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று 114 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாடு 3,02,815 பேர் கொரோவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், சென்னையில் மட்டும் 1,10,121 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது....

தமிழகத்தில் மேலும் 5,914 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் மேலும் 5,914 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை -976, செங்கல்பட்டு -483, அரியலூர் -54, கோவை -392, கடலூர் -287, தருமபுரி -18, திண்டுக்கல் -173, ஈரோடு -37, கள்ளக்குறிச்சி...

செப்., 30 வரை ரயில்கள் ரத்து இல்லை! ரயில்வே அமைச்சகம் மறுப்பு!

நாடு முழுவதும் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வரை அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும், மெயில், விரைவு ரயில்கள், பயணிகள் மற்றும் புறநகர் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று வெளியான...

கடல்சீற்றத்தால் உயிரிழந்த பிரதீப் அஸ்வின் குடும்பத்திற்கு 4 லட்சம் நிவாரணம்!

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டம், நீண்டகரை பி கிராமத்தில் கடந்த 8.8.2020 அன்று கடல் சீற்றத்தினால் கடல் நீர் ஊருக்குள் புகுந்தது. இதில் மரியதாஸ் என்பவருடைய வீட்டின் காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்து,...