சாத்தான்குளம் விவகாரம்: எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும்! வாக்குமூலம் அளித்த பெண் காவலரின் கணவர்

 

சாத்தான்குளம் விவகாரம்: எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும்! வாக்குமூலம் அளித்த பெண் காவலரின் கணவர்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இருக்கும் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் காவல்துறையினரால் தாக்கப்பட்டு சிறையில் உயிரிழந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணியாற்றிய நேரடி சாட்சியான தலைமைக்காவலர் ரேவதியிடம் விசாரணை நடத்தியதில், ஜெயராஜ், மகன் பென்னிக்ஸை காவலர்கள் விடிய விடிய கடுமையாக தாக்கியதையும், இதனால் காவல்நிலைய மேஜை மற்றும் லத்தியில் ரத்தக்கறை ஏற்பட்டதையும் தெரிவித்திருந்தார். இதற்கிடையில் சாத்தாகுளம் தந்தை, மகன் மரண வழக்கில் சாட்சியம் அளித்த பெண் காவலரிடம் அளித்த பெண் காவலரிடம் சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.

சாத்தான்குளம் விவகாரம்: எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும்! வாக்குமூலம் அளித்த பெண் காவலரின் கணவர்

இந்நிலையில் பெண் காவலரின் கணவர் தனியார் செய்தி தொலைக்காட்சியிடம் அளித்த பேட்டியில், “10 மணியளவில் தொலைப்பேசிய போது, தந்தை, மகன் இருவரையும் சக காவலர்கள் அடித்துக்கொண்டிருப்பதாக என் மனைவி கூறினார். ரத்த வெள்ளத்தில் இருந்த ஜெயராஜ் தண்ணீர் கேட்டதாக எனது மனைவி வருத்தத்துடன் கூறினார். உயிரிழப்பு தகவலறிந்து எனது மனைவி மிகுந்த மனவருத்தத்துடன் காணப்பட்டார். சம்பவத்தின்போது பணியில் இருந்ததால் விசாரணையில் தனக்கு பிரச்னை வரும் எனக்கூறினார். எனது மனைவிக்கு தைரியம் கூறி அழைத்துச் சென்றேன். எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும், பாதுகாப்பு கேட்டும் உரிய பாதுகாப்பும் வழங்கவில்லை” என தெரிவித்தார்.