சாத்தான்குளம் வழக்கு; விசாரணைக்கு எத்தனை நாட்கள் தேவை? சிபிஐ பதிலளிக்க உத்தரவு!

சாத்தான்குளம் வழக்கு; விசாரணைக்கு எத்தனை நாட்கள் தேவை? சிபிஐ பதிலளிக்க உத்தரவு!

சாத்தான்குளம் வழக்கு விசாரணையை முடிக்க எத்தனை நாட்கள் தேவைப்படும் என்பது குறித்து பதிலளிக்க மதுரை உயர்நீதிமன்றக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வசித்து வந்த தந்தை மகனான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் காவலர்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனையடுத்து இந்த வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரிகள், சம்பந்தப்பட்ட 10 காவலர்களை அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களுள் காவலர் பால்துரை அண்மையில் உயிரிழந்தார்.

சாத்தான்குளம் வழக்கு; விசாரணைக்கு எத்தனை நாட்கள் தேவை? சிபிஐ பதிலளிக்க உத்தரவு!

காவலர்கள் சிறையில் அடைக்கப்பட்ட பிறகு, இந்த வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டது. அதன் படி சாத்தான்குள வழக்கை கையிலெடுத்த சிபிஐ அதிகாரிகள், இச்சம்பவம் தொடர்பான பல ஆவணங்களை சேகரித்தனர். மேலும் காவலர்கள் கொடூரமாக தாக்கியதால் தான் அவர்கள் இருவரும் உயிரிழந்தார்கள் என நீதிமன்றத்தில் பகிரங்கமாக அறிவித்த அதிகாரிகள், கைதான காவலர்களுக்கு ஜாமீன் கொடுக்காத வண்ணம் தடுத்து வருகின்றனர்.

சாத்தான்குளம் வழக்கு; விசாரணைக்கு எத்தனை நாட்கள் தேவை? சிபிஐ பதிலளிக்க உத்தரவு!

இந்த நிலையில் இன்று மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் காவலர் முத்துராஜ், தாமஸ் பிரான்சிஸ் உள்ளிட்டோரின் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, சாத்தான்குள வழக்கு விசாரணையை முடிக்க எத்தனை நாட்கள் தேவைப்படும் என சிபிஐக்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது தொடர்பாக செப்.28 ஆம் தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.