சாத்தான்குள வழக்கு: பெண் காவலர்களின் வாக்குமூலத்தை தாக்கல் செய்ய ஆணை!

 

சாத்தான்குள வழக்கு: பெண் காவலர்களின் வாக்குமூலத்தை தாக்கல் செய்ய ஆணை!

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் பெண் காவலர்களின் வாக்குமூலத்தை தாக்கல் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை மகனான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் ஊரடங்கு நேரத்தில் கடையை திறந்து வைத்திருந்ததால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டனர். உடனே அவர்களை கோவில்பட்டி கிளைச்சிறையில் அடைத்த போலீசார், அவர்களை கடுமையாக தாக்கினர். அதில் படுகாயம் அடைந்த இருவரும் அடுத்தடுத்து உயிரிழக்க நேர்ந்த சம்பவம் பூதாகரமாக வெடித்தது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 10 காவலர்களை சிபிசிஐடி போலீசார் கைது செய்த நிலையில், வழக்கு விசாரணையை சிபிஐ கையில் எடுத்தது.

சாத்தான்குள வழக்கு: பெண் காவலர்களின் வாக்குமூலத்தை தாக்கல் செய்ய ஆணை!

பிறகு ஜெயராஜின் நண்பர்கள், சக வியாபாரிகள் என அனைத்து தரப்பினரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்ட சிபிஐ, காவலர்கள் தாக்கியதால் தான் அவர்கள் உயிரிழந்ததாக நீதிமன்றத்தில் ஆணித்தரமாக தெரிவித்தது. அதுமட்டுமில்லாமல், சிறையில் இருக்கும் காவலர்களுக்கு ஜாமீன் கிடைக்காத வண்ணம் தடுத்து வருகிறது. மேலும், காவலர்களுக்கு எதிராக அண்மையில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தது.

சாத்தான்குள வழக்கு: பெண் காவலர்களின் வாக்குமூலத்தை தாக்கல் செய்ய ஆணை!

இந்த நிலையில் தந்தை மகன் கொலை வழக்கு மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பெண் காவலர்களின் வாக்குமூலங்கள், சாட்சியங்கள் மற்றும் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும் என சிபிஐக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கில் சாத்தான்குள பெண் காவலர்கள் 2 பேர் கைதான காவலர்களுக்கு எதிராக வாக்குமூலம் அளித்தனர் என்பது நினைவுக்கூரத்தக்கது.