சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை வேண்டும்! – ஐ.நா தலைவர் விருப்பம்

சாத்தான்குளத்தில் போலீஸ் கஸ்டடியில் தந்தை, மகன் அடித்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா சபை தலைவர் ஆட்டானியோ குட்டரஸ் கூறியதாக ஐ.நா செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ஐ.நா சபையின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, இந்தியாவின் தமிழ்நாட்டில் கடந்த ஜூன் 19ம் தேதி கைது செய்யப்பட்ட தந்தை பி.ஜெயராஜ், மகன் ஜெ.ஃபெனிக்ஸ் போலீசாரின் சித்ரவதை காரணமாக உயிரிழந்து பற்றி ஐ.நா தலைவரின் கருத்து என்ன என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், “இதுபோன்ற ஒவ்வொரு மரணம் தொடர்பாகவும் முழுமையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஐ.நா சபை தலைவர் ஆன்டானியோ குட்டரஸ் விரும்புகிறார்” என்றார்.

இந்த மரணம் தொடர்பாக மனித உரிமை அமைப்புகள் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்துள்ளன. மனித உரிமை கண்காணிப்பகத்தின் தெற்காசியவுக்கான இயக்குநர் மீனாட்சி கங்குலி கூறுகையில், “ஒரு நபரை கைது செய்வதற்கு முன்பு பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை நீதிமன்றம் பல முறை தன்னுடைய தீர்ப்புகளில் சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழக போலீஸ் அதிகாரிகள் எந்த அளவுக்கு அதை மீறி நடந்துகொள்கிறார் என்பதை வெளிப்படுத்துவது மட்டுமின்றி அவர்களுக்கு யாராவது பாடம் நடத்த வேண்டும் என்பதைக் காட்டுகிறது” என்றார். தந்தை, மகன் கொலை வழக்கு பற்றி ஐ.நா சபை வரையில் பேசுவது இந்த வழக்கில் மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Most Popular

பக்ரித் பண்டிகை கொண்டாட ஊருக்கு சென்ற ராணுவ வீரர் மாயம்… தேடுதல் பணி தீவிரம்!

பக்ரீத் பண்டிகை தினத்தை கொண்டாடுவதற்காக ஜம்மு காஷ்மீர் சோபியான் மாவட்டத்திற்கு சென்ற 162-வது பட்டாலியன் படை பிரிவை சேர்ந்த ரைபிள்மென் ஒருவர் மாலை 5 மணி முதல் காணாமல் போயுள்ளார். காணாமல் போன...

நாய்க்குட்டிக்கும் மாஸ்க் அணிவித்த சிறுவன்… இதயங்களை வென்ற செயல்!

அரசாங்கம் மக்கள் வெளியில் செல்லும் போது மாஸ்க் அணிந்து செல்லுமாறு தொடர்ந்து வலுயுறுத்தி வருகிறது. பெரும்பாலான மக்கள் அதை கடைபிடிப்பதில்லை. ஆனால் சிறுவன் ஒருவன் தான் மாஸ்க் அணிந்துள்ளது மட்டுமில்லாமல் தனது மாஸ்க் அணிவித்து...

ஆளுநர் மாளிகையில் சுதந்திர தின நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து

ஆளுநருக்கும், ஆளுநர் மாளிகையில் உள்ளவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து ராஜ்பவனில் நடைபெற இருந்த சுதந்திர தின நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. தமிழக ஆளுநர் மாளிகையில் 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான...

இன்று 5,609 பேருக்கு கொரோனா… இதுவரை இல்லாத அளவிற்கு அதிக பட்சமாக 109 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் இன்று 58,211 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 5,609 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.63 லட்சத்தைக் கடந்துள்ளது. பரிசோதனை செய்யப்படுவோர்கள் மற்றும்...