சசிகலா அண்ணன் மகன் சுதாகரன் சொத்துக்கள் முடக்கம்

 

சசிகலா அண்ணன் மகன் சுதாகரன் சொத்துக்கள் முடக்கம்

சசிகலாவின் அண்ணன் மகன் சுதாகரனின் சொத்துக்களை வருமானவரித்துறை முடக்கி இருக்கிறது. சிறுதாவூர் பங்களா வளாகத்தில் இருக்கும் சுதாகரனுக்கு சொந்தமான 21 ஏக்கர் நிலத்தினை தற்போது முடக்கப்பட்டிருக்கிறது. பினாமி தடுப்புச் சட்டத்தின் கீழ் வருமான வரித் துறையால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

சசிகலா அண்ணன் மகன் சுதாகரன் சொத்துக்கள் முடக்கம்

முன்னதாக சசிகலாவின் பையனூர் பங்களா முடக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது சிறுதாவூர் பங்களாவில் உள்ள சுதாகரனுக்கு சொந்தமான நிலமும் முடக்கப்பட்டிருக்கிறது.

மறைந்த முன்னாள் முதல்வர் இந்த சுதாகரனை தனது வளர்ப்பு மகனாக அறிவித்து மிக ஆடம்பரமாக அவருக்குத் திருமணமும் நடத்தி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சசிகலா, இளவரசி , சுதாகரனுக்கு சொந்தமான சென்னை, காஞ்சிபுரம் ,உள்ளிட்ட 7 இடங்களில் உள்ள சொத்துக்கள் பினாமி தடுப்புச் சட்டத்தின் கீழ் வருமான வரித்துறையினரால் முடக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த 8ஆம் தேதி சசிகலாவின் பையனூர் பங்களாவும், இன்றைக்கு சிறுதாவூர் பங்களாவில் உள்ள சுதாகரனுக்கு சொந்தமான 21 ஏக்கர் நிலமும் பினாமி தடுப்புச் சட்டத்தின் கீழ் வருமான வரித்துறையினரால் முடக்கப்பட்டிருக்கிறது.