வெளியே வர சசிகலா ஆயத்தம்! அபராதத்தை செலுத்த வக்கீலுக்கு அதிரடி கடிதம்!!

 

வெளியே வர சசிகலா ஆயத்தம்! அபராதத்தை செலுத்த வக்கீலுக்கு அதிரடி கடிதம்!!

சசிகலாவின் விடுதலை குறித்து அவ்வப்போது ஒரு தகவல் வந்துகொண்டே இருக்கும் நிலையில், அவரது வழக்கறிஞருக்கு கடிதம் எழுதி உள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கடந்த நான்கு வருடங்களாக இருக்கிறார் சசிகலா. அவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி விடுதலை ஆவதாக தகவல் வெளிவந்தது. பின்னர் ஆகஸ்ட் 28ம் தேதி விடுதலை ஆவதாக தகவல் வந்தது. உண்மையில் , சசிகலாவுக்கான 10 கோடி ருபாய் அபராத தொகையினை இன்னமும் கட்டாமல் இருப்பதாகவும், அதைக் கட்டி முடித்தவுடன் தான் சசிகலாவின் விடுதலை குறித்து சிறைத்துறை அறிவிக்கும் என்றும் அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

வெளியே வர சசிகலா ஆயத்தம்! அபராதத்தை செலுத்த வக்கீலுக்கு அதிரடி கடிதம்!!

இந்நிலையில் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியனுக்கு சசிகலா கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “சிறையில் நான் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார். கொரோனா தொற்றால் தமிழக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாவது கவலை அளிக்கிறது. விரைவில் தமிழகம் கொரோனாவிலிருந்து மீண்டுவர இறைவனை பிரார்த்திக்கிறேன். கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதத்திலிருந்து நேர்காணலை சிறைத்துறை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது. விரைவில் நேர்காணல் நடைபெறும் என தெரிகிறது. அப்போது எனது நன்னடத்தை விஷயத்தை விரைவில் சட்டப்படியாக முடிவெடுப்பார்கள் என நம்புகிறேன். அபராத தொகையை நீதிமன்றத்தில் செலுத்த ஏற்பாடு செய்யுங்கள். கர்நாடக நீதிமன்றத்தில் அபராதத்தொகையை கட்டிய பிறகு உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2017 தீர்ப்பு வழக்கு விஷயத்தில் சட்டப்படியாக தீர்ப்பு நகலில் திருத்தங்கள் குறித்த மனுவை தாக்கல் செய்ய இயலுமா என்பதனை மீண்டும் டெல்லி மூத்த வக்கீல்களிடம் உறுதி செய்யுங்கள். அதுபற்றி டிடிவி தினகரனிடம் ஆலோசித்து செயல்படுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.