“பாஜக அழுத்தத்தால் சசிகலா விலகல்” : திருமாவளவன் கருத்து!

 

“பாஜக அழுத்தத்தால் சசிகலா விலகல்” : திருமாவளவன்  கருத்து!

திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை புறக்கணிக்கவில்லை என்று திருமாவளவன் விளக்கமளித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறும் நிலையில் தேர்தல் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. திமுகவை பொறுத்தவரை தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேசி வருகிறது. திமுகவுடனான பேச்சுவார்தையில் உடன்பாடு எட்டாததால் திமுகவுடனான பேச்சுவார்த்தையை விசிக புறக்கணித்ததாக கூறப்பட்டது.

“பாஜக அழுத்தத்தால் சசிகலா விலகல்” : திருமாவளவன்  கருத்து!

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பியுமான திருமாவளவன், “திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை புறக்கணிக்கவில்லை. திமுக கூட்டணியில் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து பயணிக்கும். மூன்றாவது அணியில் விசிக இணைந்து பயணிக்க வாய்ப்பு உள்ளதா என்பது பொருத்தமற்ற கேள்வி ” என்றார்.

“பாஜக அழுத்தத்தால் சசிகலா விலகல்” : திருமாவளவன்  கருத்து!

தொடர்ந்து சசிகலா அரசியலில் இருந்து விலகியது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், “பாஜகவின் நெருக்கடிக்கு ஆட்பட்டு சசிகலா அரசியலில் இருந்து விலக முடிவு எடுத்திருக்கலாம்” என்று கூறினார்.திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு என தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இன்று மாலை உடன்பாடு கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.