ராமாபுரம் ஏம்ஜிஆர் இல்லத்திற்கு சென்ற சசிகலா

 

ராமாபுரம் ஏம்ஜிஆர் இல்லத்திற்கு சென்ற சசிகலா

பெங்களூருவில் இருந்து நேற்று சென்னை புறப்பட்ட சசிகலாவுக்கு வழிநெடுக உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த 4 ஆண்டுகளாக சிறையில் இருந்த சசிகலா கடந்த 27ஆம் தேதி விடுதலையானார். முன்கூட்டியே அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சசிகலா மருத்துவர்களின் அறிவுரைப்படி தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். அதனால் அவர் பெங்களூருவில் உள்ள சொகுசு விடுதி ஒன்றில் தங்கி ஓய்வெடுத்து வந்தார். இதையடுத்து நேற்று காலை 7:45 மணிக்கு பெங்களூருவில் இருந்து தமிழகம் புறப்பட்ட சசிகலாவுக்கு அதிமுக மற்றும் அமமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ராமாபுரம் ஏம்ஜிஆர் இல்லத்திற்கு சென்ற சசிகலா

230 கிலோ மீட்டர் பயணத்தை அவர் 23 மணி நேரமாக மேற்கொண்டார். அந்த அளவுக்கு அவருக்கு வழிநெடுக உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து இன்று காலை 3 மணி அளவில் பூவிருந்தவல்லி நசரத்பேட்டை பகுதிக்கு வந்தடைந்தார் சசிகலா. அங்கு அவருக்கு முன்னாள் எம்எல்ஏக்கள் பொன்ராஜ் , ஏழுமலை உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அத்துடன் சசிகலாவிற்கு வெள்ளியால் ஆன விநாயகர் சிலை மற்றும் ரூபாய் நோட்டு மாலைகள் வழங்கப்பட்டன.

ராமாபுரம் ஏம்ஜிஆர் இல்லத்திற்கு சென்ற சசிகலா

இந்நிலையில் ராமாபுரம் வந்தடைந்த சசிகலா அங்குள்ள எம்ஜிஆர் வாழ்ந்த வீட்டிற்கு சென்று அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.பின்னர் அங்கிருந்து புறப்பட்டு தி நகரில் உள்ள தனது அண்ணன் மகள் கிருஷ்ணப்ரியாவின் வீட்டிற்கு சசிகலா வந்தடைந்தார்.முன்னதாக ராமாபுரம் இல்லத்தில் பேனர், கொடி கம்பம் வைக்க தடை விதிக்க வேண்டும் என எம்ஜிஆர் வளர்ப்பு மகள்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.