“விவசாயிகள் பேரணி வன்முறையானதுக்கு பாஜகவும் அதிமுகவும் தான் காரணம்” – ஸ்டாலின் கண்டனம்!

 

“விவசாயிகள் பேரணி வன்முறையானதுக்கு பாஜகவும் அதிமுகவும் தான் காரணம்” –  ஸ்டாலின் கண்டனம்!

வன்முறை அரசின் திசை திருப்பல் முயற்சிக்கு உதவிடும் என்பதால் அமைதி வழியில் தீர்வு காண விவசாயிகள் முயல வேண்டும் என மு.க. ஸ்டாலின் டெல்லி விவசாயிகள் பேரணி குறித்து கூறியுள்ளார். மத்திய அரசின் அணுகுமுறையே போராட்டக் காட்சிகளுக்கு காரணம் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

டெல்லியில் விவசாயிகள் பேரணி கலவரமாக உருமாறியுள்ளது. உருமாற்றப்பட்டுள்ளது என்று சொல்வதே சரியாக இருக்கும். விவசாயிகள் போர்வையில் சில விஷமிகள் ஊடுருவி போராட்டத்தை திசை திருப்பி விட்டதாக விவசாயிகள் சங்கத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். தற்போது செங்கோட்டையைச் சுற்றிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, இணைய வசதி துண்டிக்கப்பட்டுள்ளது.

“விவசாயிகள் பேரணி வன்முறையானதுக்கு பாஜகவும் அதிமுகவும் தான் காரணம்” –  ஸ்டாலின் கண்டனம்!

இருப்பினும், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் மத்திய அரசும் டெல்லி போலிஸும் சதித் திட்டம் தீட்டி விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர இதுபோன்று மூர்க்கத்தனமாக செயல்படுவதாக குற்றம் சாட்டியிருந்தனர். அந்த வகையில் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மத்திய அரசையும் தமிழக அரசையும் கண்டித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “மத்திய அரசின் அணுகுமுறையே விவசாயிகளின் போராட்டக் காட்சிகளுக்குக் காரணம். அதிமுக ஆதரிக்காமல் இருந்திருந்தால் வேளாண் சட்டங்கள் நிறைவேறியே இருக்காது.

வன்முறை அரசின் திசைதிருப்பல் முயற்சிக்கு உதவிடும். ஜனநாயக நெறிக்கு உட்பட்டு அமைதி வழியில் தீர்வு காண இருதரப்பினரும் முயல வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.