‘வாழ்க்க ஒரு வட்டம்’ – சசிகலாவுக்கு வரலாறும் ஓபிஎஸ்ஸும் உணர்த்தும் பாடம்!

‘வாழ்க்க ஒரு வட்டம்’ – சசிகலாவுக்கு வரலாறும் ஓபிஎஸ்ஸும் உணர்த்தும் பாடம்!

நான்காண்டு சிறைவாசத்திற்குப் பின் சசிகலா நேற்று (பிப்ரவரி 8) மீண்டும் தமிழகம் வந்தடைந்தார். இது அதிமுக தொண்டர்கள் மத்தியில் மகிழ்ச்சியை வரவழைத்தாலும், இரட்டைத் தலைமையின் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது.

‘வாழ்க்க ஒரு வட்டம்’ – சசிகலாவுக்கு வரலாறும் ஓபிஎஸ்ஸும் உணர்த்தும் பாடம்!

அதனால் தான் அவர் வருவதற்கு முன்பே நினைவிட மூடல், கட்சி ஆபிஸில் டைட் செக்யூரிட்டி, கொடியைப் பயன்படுத்த தடை என பம்பரமாகச் சுழன்று செக் வைத்துள்ளார்கள் எடப்பாடி&கோ. குறிப்பாக, அமைச்சர் ஜெயக்குமார் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், சசிகலா திமுகவின் ‘பி’ டீம் என்று விமர்சித்திருந்தார். அமைச்சர் ஜெயக்குமார் இதைக் கூறிய தேதி 08/02/2021.

‘வாழ்க்க ஒரு வட்டம்’ – சசிகலாவுக்கு வரலாறும் ஓபிஎஸ்ஸும் உணர்த்தும் பாடம்!

(அப்படியே ஒரு கட்… வாங்க பிளாஸ்பேக் போகலாம்) முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்குப் பின் இரவோடு இரவாக ஓபிஎஸ் முதல்வராகப் பதவியேற்றுக்கொண்டார். சசிகலா பொதுச்செயலாளர் பதவியைத் தனதாக்கிக்கொண்டார். ஜெயலலிதாவிடம் காட்டிய அணுக்கத்தை சசிகலாவிடம் காட்ட ஓபிஎஸ் மறுத்துவிட்டார் என அப்போது கூறப்பட்டது. இப்படியே விட்டுவிட்டால் காலை வாரி விடுவார் என்று உணர்ந்த சசிகலா, 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி ஓபிஎஸ்ஸை பதவி ராஜினாமா செய்யவைத்தார். (இதனை தர்மயுத்தம் பிரஸ்மீட்டில் ஓபிஎஸ் கூறினார்)

‘வாழ்க்க ஒரு வட்டம்’ – சசிகலாவுக்கு வரலாறும் ஓபிஎஸ்ஸும் உணர்த்தும் பாடம்!

இதையடுத்து எதுவும் பேசாமல் இருந்த ஓபிஎஸ் பிப்ரவரி 7ஆம் தேதி ஜெயலலிதா சமாதியில் தியாணம் மேற்கொண்டு தர்மயுத்தம் நடத்தினார். தமிழகமே ஒரு கணம் ஓபிஎஸ்ஸை மாஸ் ஹீரோவாகப் பார்த்தது. அதன்பின் சசிகலா சிறை சென்றதும், ஈபிஎஸ் முதல்வரானதும், மக்கள் மத்தியில் ஓபிஎஸ் ஜீரோவானதும் ஊரறிந்த உண்மை.

‘வாழ்க்க ஒரு வட்டம்’ – சசிகலாவுக்கு வரலாறும் ஓபிஎஸ்ஸும் உணர்த்தும் பாடம்!

பிப்ரவரி 8ஆம் தேதி ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தியதை விமர்சித்த சசிகலா, “ஓபிஎஸ்ஸின் பின்னணியில் திமுக இருக்கிறது” என்றார். சசிகலா இதனைக் கூறிய தேதி 08/02/2017. வாழ்க்க ஒரு வட்டம் என்பதன் தாத்பரியம் இப்போது அனைவருக்கும் புரிந்திருக்கும். உரக்க சொல்லுங்கள்… வாழ்க்க ஒரு வட்டம்!