`ஆசீர்வாதம் ஆச்சாரி ட்வீட்டால் பதறிய அதிமுக!’-சசிகலா விவகாரத்தில் ஆடுபுலி ஆட்டம் விளையாடும் பாஜக

 

`ஆசீர்வாதம் ஆச்சாரி ட்வீட்டால் பதறிய அதிமுக!’-சசிகலா விவகாரத்தில் ஆடுபுலி ஆட்டம் விளையாடும் பாஜக

பாஜக செய்தி தொடர்பாளர் ஆசீர்வாதம் ஆச்சாரி போட்டுள்ள ட்விட்தான் அரசியல் களத்தில் தற்போதைய ஹாட்பிட். அது என்னவென்றால், “ஆகஸ்ட் 14ம் தேதி சசிகலா வெளியே வருகிறார்” என்பதுதான் அந்த ட்வீட்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். அதன்பிறகு அதிமுகவில் குழப்பங்கள் ஏற்பட்டன. சசிகலா தரப்பினரை ஓபிஎஸ்ஸும் ஈபிஎஸ்ஸும் சேர்ந்து கட்சியில் இருந்து ஒதுக்கி வைத்தனர். இதைத் தொடர்ந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. இதன் பொதுச் செயலாளராக சசிகலாவும் துணைப் பொதுச் செயலாளராக டி.டி.வி தினகரனும் நியமிக்கப்பட்டனர். இதனிடையே, சொத்து குவிப்பு வழக்கில் 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டவர்களுக்கு வழங்கப்பட்ட கீழ்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்தது. இதையடுத்து, சசிகலா உள்ளிட்ட 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். மூன்று ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் சசிகலா வெளியே வரப்போகிறார்கள் என்ற வதந்திகள் தொடர்ந்த வண்ணம் இருந்து வருகின்றன.

`ஆசீர்வாதம் ஆச்சாரி ட்வீட்டால் பதறிய அதிமுக!’-சசிகலா விவகாரத்தில் ஆடுபுலி ஆட்டம் விளையாடும் பாஜக

இந்த நிலையில் சசிகலா விடுதலை குறித்து ட்வீட் போட்டு பற்றவைத்துள்ளார் பாரதிய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் ஆசீர்வாதம் ஆச்சாரி. “ஆகஸ்ட் 14ஆம் தேதி சசிகலா சிறையிலிருந்து விடுதலை ஆவார்” என்பதுதான் அந்த ட்வீட். இந்த ட்வீட்தான் தற்போது அரசியல் வட்டாரத்தில் மட்டுமின்றி அதிமுகவில் மீண்டும் பரபரப்பை கிளப்பி இருக்கிறது. சசிகலா விடுதலை என்ற தகவல் அவரது உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் வட்டமடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், சசிகலா விடுதலை பற்றி பரப்பன அக்ரஹாரம் சிறைத்துறை நிர்வாகம் இதுவரை எந்தவித பதிலும் அளிக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது. அதனால், சசிகலா விடுதலை என்பது வெறும் வதந்திதான் என்று சொல்லப்பட்டாலும் எப்படி இருந்தாலும் இன்னும் சில மாதங்களில் சசிகலாவை வெளியே கொண்டுவருவதற்கு ஆன அனைத்து ஏற்பாடுகளையும் அவரது குடும்பத்தினர் செய்து வருகின்றனர். இந்த வதந்திக்கு தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது பரப்பன அக்ரஹாரம் சிறைத் துறை. ஆகஸ்ட் 15ஆம் தேதி நன்னடத்தையில் வெளிவரும் பட்டியலில் சசிகலா பெயர் இல்லை என்பது திட்டவட்டமாக கூறியிருக்கிறது.

சசிகலா விவகாரம் குறித்து அ.தி.மு.க உள்விவகாரம் அறிந்த தலைவர்களிடம் பேசியபோது,”சசிகலா ஆகஸ்ட் 15ம் தேதி வெளிவருவதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு. கர்நாடக சிறையிலிருந்து சுதந்திர தினத்துக்கு முன்பு விடுவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளன. 65 பேர் கொண்ட பட்டியல் தயார் செய்திருக்கிறார்கள். இதில் சசிகலாவின் பெயர் இல்லை என்று தெரிவித்தனர்.

`ஆசீர்வாதம் ஆச்சாரி ட்வீட்டால் பதறிய அதிமுக!’-சசிகலா விவகாரத்தில் ஆடுபுலி ஆட்டம் விளையாடும் பாஜக

“சசிகலாவுக்கு இன்னும் 6 மாத கால தண்டனை உள்ளது” என்று தெரிவித்த அவர்கள், “முன்கூட்டியே விடுவிப்பது குறித்து முடிவு எடுக்கப்படவில்லை எனக் கர்நாடக சிறைத்துறை அதிகாரிகள் மறுத்திருக்கிறார்கள். இப்படி இருக்கும் சசிகலா எப்படி வெளியில் வர முடியும். ஆசீர்வாதம் ஆச்சாரி அரசியல் செய்வதற்காகவும், ஆளுங்கட்சியினருக்குள் சலசலப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும் இதுபோன்ற ஒரு ட்வீட்டை போட்டிருக்கிறார். ஆகஸ்ட் மாதம் சசிகலா வெளியில் வருகிறார் என்றால் அதற்கு இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கிறது” என்றனர்.

மேலும் அவர்கள் கூறுகையில், “இப்போது அதனை வெளியில் சொல்வதற்கு என்ன அவசியம் இருக்கிறது. அவர் நினைத்தது போல் சர்ச்சைகள் ஆரம்பிக்கத் தொடங்கியுள்ளது. ஆளும்கட்சியில் உள்ளவர்கள் சிலர் மன்னார் குடி வகையறாக்களைத் தொடர்புகொண்டு பேசிக்கொண்டிருக்கிறார்கள். இது அதிமுக தலைமைக்கு சென்று கொண்டிருக்கிறது” என்றனர்.