“எம்ஜிஆருக்கு சசிகலா ஆலோசனை சொல்லியிருக்கலாம்” : துக்ளக் நாளிதழை ஆதாரமாக காட்டும் அரசியல் விமர்சகர்!!

“எம்ஜிஆருக்கு சசிகலா ஆலோசனை சொல்லியிருக்கலாம்” : துக்ளக் நாளிதழை ஆதாரமாக காட்டும் அரசியல் விமர்சகர்!!

அதிமுக சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்த பிறகு சசிகலா தனது அரசியல் விளையாட்டை ஆரம்பித்துள்ளார். அதிமுக தொண்டர்களுடன் தொலைபேசியில் பேசி வரும் சசிகலாவின் ஆடியோக்கள் தற்போது 100ஐ தாண்டி உள்ளது. அதேசமயம் சசிகலா உடன் தொலைபேசியில் பேசி வரும் நபர்களை சலிக்காமல் அதிமுக தலைமையில் கட்சியிலிருந்து நீக்கி வருகிறது.

இந்த சூழலில் தூத்துக்குடியை சேர்ந்த ராமசாமி என்ற அதிமுக தொண்டருடன் தொலைபேசியில் பேசிய சசிகலா, நான் அம்மாவின் அரசியல் பயணத்தில் மட்டுமல்ல ; எம்ஜிஆரின் அரசியல் பயணத்தில் உடன் இருந்திருக்கிறேன். கட்சி தொடர்பாக எம்ஜிஆர் என்னிடம் நிறைய ஆலோசனைகளை கேட்பார். இது பலருக்கு தெரியாது என்றார். இந்த விவகாரம் எம்ஜிஆரின் அபிமானிகளிடத்தில் சலசலப்பை உண்டாக்கியுள்ளது.

“எம்ஜிஆருக்கு சசிகலா ஆலோசனை சொல்லியிருக்கலாம்” : துக்ளக் நாளிதழை ஆதாரமாக காட்டும் அரசியல் விமர்சகர்!!

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி, “சசிகலா எம்ஜிஆருக்கு ஆலோசனை கூறியதாக கூறியதில் உண்மை இருக்கலாம். அதை நாம் மறுக்க முடியாது. இது குறித்து ஒரு முறை துக்ளக் நாளிதழில் அதன் ஆசிரியர் சோ, சசிகலா எம்ஜிஆரின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தார். அதன் அடிப்படையில்தான் அவர் ஜெயலலிதாவுடன் தங்கி அவரைப் பார்த்துக் கொண்டிருந்தார் என்று குறிப்பிட்டிருந்தார்.

“எம்ஜிஆருக்கு சசிகலா ஆலோசனை சொல்லியிருக்கலாம்” : துக்ளக் நாளிதழை ஆதாரமாக காட்டும் அரசியல் விமர்சகர்!!

இதைப் பார்க்கும்போது சசிகலா எம்ஜிஆருக்கு ஆலோசனை சொல்லி இருக்கலாம். அதை எம்ஜிஆர் கேட்டு இருக்கலாம். ஆனால் இறுதி முடிவு என்பதை அவர்தான் எடுத்திருப்பார். எப்போதுமே நம்பிக்கைக்குரியவர்களிடம் ஆலோசனைகளை கேட்பது வழக்கமான ஒன்றுதான். அதனால் எம்ஜிஆருக்கு சசிகலா ஆலோசனை வழங்கியதாக கூறியதை நம்மால் மறுக்க முடியாது . ஆனால் அதிமுக பிளவுபட்டு இருப்பதாக சசிகலா கூறுவது என்பது தவறான விஷயம். அது தற்போது ஓபிஎஸ் இபிஎஸ் தலைமையில் ஒற்றுமையுடன் தான் இருக்கிறது ” என்றார்.