“அது அதிமுகவோட உட்கட்சி விவகாரம்… எங்களுக்கு சம்பந்தமில்லங்க” – அந்தர் பல்டி அடித்த எல்.முருகன்!

“அது அதிமுகவோட உட்கட்சி விவகாரம்… எங்களுக்கு சம்பந்தமில்லங்க” – அந்தர் பல்டி அடித்த எல்.முருகன்!

அதிமுக-பாஜக தொகுதிப் பங்கீடு இன்னமும் இழுபறியிலேயே போய்க்கொண்டிருக்கிறது. 35 தொகுதிகளுக்கு மேல் பாஜக கேட்பது தான் அதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. சசிகலாவையும் அமமுகவையும் இணைக்க வேண்டும் என வலியுறுத்துவதும் மற்றொரு காரணமாக இருக்கிறது. சில நாட்களுக்கு முன் தமிழகம் வந்த அமித் ஷா சசிகலாவை இணைக்க அதிமுகவின் இரட்டைத் தலைமையை வலியுறுத்தியதாக தகவல் வெளியானது.

“அது அதிமுகவோட உட்கட்சி விவகாரம்… எங்களுக்கு சம்பந்தமில்லங்க” – அந்தர் பல்டி அடித்த எல்.முருகன்!

அதற்குக் காரணம் சசிகலாவை இணைத்தால் அதிமுகவின் பவர் கூடும். அதனால் தாங்கள் கேட்கும் தொகுதிகளை அடித்துக் கேட்கலாம் என்பதே பாஜகவின் நோக்கம். இதனை எடப்பாடி தட்டிக் கழிக்கிறார். அவர் கூட்டணி பங்கீட்டில் கறாராக இருக்கிறாராம். இச்சூழலில் இன்று காலை பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார், “சசிகலாவை இணைப்பது சாத்தியமற்ற ஒன்று. பாஜகவிற்கு அவரை இணைக்க விருப்பம் காட்டுகிறது. அது அவர்களின் விருப்பம். எங்களின் உள் விவகாரங்களில் அவர்களோ அல்லது யாரோ கட்டாயப்படுத்தக் கூடாது” என்றார்.

“அது அதிமுகவோட உட்கட்சி விவகாரம்… எங்களுக்கு சம்பந்தமில்லங்க” – அந்தர் பல்டி அடித்த எல்.முருகன்!

இதையடுத்து பேசிய பாஜக பொறுப்பாளர் சி.டி. ரவி, சசிகலாவின் பலம் என்ன பலவீனம் என்ன என்பதை அதிமுக அறியும் என மேலோட்டமாகச் சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டார். தற்போது செய்தியாளர்களிடம் பேசிய மாநில பாஜக தலைவர் எல். முருகன், “சசிகலாவை இணைப்பது குறித்து அமித் ஷாவோ நாங்களோ அதிமுகவிடம் எதுவும் பேசவில்லை. அதற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை. அது அதிமுகவின் உட்கட்சி விவகாரம். எங்களின் தலையீடு அதில் இருக்காது. அவர்களுக்குள்ளாகவே பேசித் தீர்த்துக் கொள்வார்கள்” என அந்தர் பல்டி அடித்திருக்கிறார்.