Home அரசியல் "அதிமுகவிலோ, ஆட்சியிலோ சசிகலாவுக்கு இடமில்லை" : அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்!

“அதிமுகவிலோ, ஆட்சியிலோ சசிகலாவுக்கு இடமில்லை” : அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்!

நன்னடத்தை விதிமுறைகள் அடிப்படையில் தண்டனைக் காலம் குறைக்கப்பட வாய்ப்பில்லை

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா. சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல் ஜெயலலிதா உடன் போயஸ் கார்டன் வீட்டிலிருந்தவர். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க-வின் தற்காலிக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார்.பின்பு சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை உறுதி செய்யப்பட்டதால் சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அடைக்கப்பட்டார்.

அவரை டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அவ்வப்போது சிறையில் சென்று சந்தித்து வருகின்றனர். அதிமுகவின் பொதுசெயலாளராக சசிகலா பொறுப்பேற்ற நிலையில் அவர் சிறைக்கு சென்றது கவனிக்கத்தக்கது. தற்போது மூன்று ஆண்டுகள் சசிகலா சிறை தண்டனையை அனுபவித்துள்ளார். சசிகலாவுக்கு நன்னடத்தை விதிமுறைகள் அடிப்படையில் தண்டனைக் காலம் குறைக்கப்பட வாய்ப்பில்லை என்று கர்நாடக சிறைத்துறை தெரிவித்துள்ளது.

இதையடுத்து இன்று நாகை மாவட்டம் செருதூர் பகுதியில் கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ் மணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் சசிகலா விடுதலைக்கு பின்பு கட்சியில் தலைமை பொறுப்பா? என்பது போன்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “சிறையிலிருந்து சசிகலா வெளியே வந்தால் அதிமுகவை யார் வழி நடத்துவது என தலைமை தான் முடிவு செய்யும்” என்று தெரிவித்தார்.

இந்நிலையில் இதுகுறித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்தாலும் அதிமுகவிலோ, ஆட்சியிலோ சசிகலாவுக்கு இடமில்லை என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். மேலும் சசிகலா விவகாரத்தில் ஏற்கனவே அதிமுக என்ன முடிவு எடுத்ததோ அதே தான் நாளையும் தொடரும். ஒரு குடும்பத்தை தவிர மற்றவர்கள் அதிமுகவுக்கு வரலாம்” என்று கூறியுள்ளார்.

Most Popular

‘நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளை கைது செய்க’; விவசாய சங்கத் தலைவர் திடீர் போராட்டம்!

திருச்சி அருகே சாலை அமைக்கும் நெடுஞ்சாலைத் துறையினரை கைது செய்யக்கோரி விவசாய சங்கத் தலைவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். திருச்சி துவாக்குடியில் சாலையை விரிவுப்படுத்துவதற்காக அப்பகுதியில்...

ஓ.பி.எஸ் உடன் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் சந்திப்பு!

துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ பன்னீர்செல்வத்துடன் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஆலோசனை நடத்துகிறார். அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது சலசலப்பு நீடிக்கும்...

இந்தியாவில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா; ஒரே நாளில் 1,179 பேர் மரணம்!

இந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் அதே சூழலில், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில்...

முக்திக்கு வழி கொடுக்கும் விஷ்ணு சகஸ்ரநாமம்!

புதன் பகவானுக்குரிய தெய்வமான மகாவிஷ்ணுவை வணங்குவதற்கு உரிய நாளாக புதன்கிழமை சொல்லப்படுகிறது.பல தெய்வங்களுக்கும் சகஸ்ரநாமங்கள் இருந்தபோதும் சகஸ்ரநாமம் என்றதும் நம் நினைவுக்கு வருவது விஷ்ணு சகஸ்ரநாமமே. இந்நாளில் விஷ்ணு சகஸ்ரநாமத்தை...
Do NOT follow this link or you will be banned from the site!