‘எம்ஜிஆர் தோட்டம் அருகே சசிகலா கொடியேற்ற எதிர்ப்பு’ : எம்ஜிஆர் வளர்ப்பு மகள்கள் ஐகோர்ட்டில் முறையீடு!

‘எம்ஜிஆர் தோட்டம் அருகே சசிகலா கொடியேற்ற எதிர்ப்பு’ : எம்ஜிஆர் வளர்ப்பு மகள்கள் ஐகோர்ட்டில் முறையீடு!

எம்ஜிஆர் தோட்டம் அருகே சசிகலா கொடியேற்ற எம்ஜிஆர் வளர்ப்பு மகள்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த சசிகலா கடந்த 27 ஆம் தேதி விடுதலையானார். இதை தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் குணமாகி பெங்களூரு விடுதியில் ஓய்வெடுத்து வருகிறார். இதை தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், வரும் 7 ஆம் தேதி சசிகலா தமிழகம் வருகிறார் என்றார். இதையடுத்து அவர் 8 ஆம் தேதி வருவதாக புதிய அறிவிப்பை வெளியிட்டார் தினகரன்.தமிழகம் வரும் சசிகலா எம்ஜிஆரின் சென்னை ராமாவரம் தோட்டத்திற்கு சென்று கொடியேற்றுவார் என்று தகவல் வெளியானது.

‘எம்ஜிஆர் தோட்டம் அருகே சசிகலா கொடியேற்ற எதிர்ப்பு’ : எம்ஜிஆர் வளர்ப்பு மகள்கள் ஐகோர்ட்டில் முறையீடு!

இந்நிலையில் சென்னை ராமாபுரம் எம்ஜிஆர் தோட்டம் அருகே சசிகலா கொடி ஏற்ற தடை கோரி ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. சசிகலா கொடியேற்றுவதற்காக கம்பம் நட, பேனர் வைக்க தடை கோரி எம்ஜிஆர் வளர்ப்பு மகள்கள் முறையீடு செய்துள்ளனர். எம்ஜிஆர் வளர்ப்பு மகள்கள் கீதா, ராதாவின் முறையீட்டை விசாரிக்க உயர் நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. அமமுக சார்பில் சசிகலா கொடியேற்ற நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

‘எம்ஜிஆர் தோட்டம் அருகே சசிகலா கொடியேற்ற எதிர்ப்பு’ : எம்ஜிஆர் வளர்ப்பு மகள்கள் ஐகோர்ட்டில் முறையீடு!

முன்னதாக கடந்த 2017 ஆம் ஆண்டு எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி, அப்போதைய அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, ராமாவரம் இல்லத்திற்கு கொடியேற்றியதுடன், எம்ஜிஆர் சிலையை திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.