காரை விட்டு இறங்கி பிரச்சார வாகனத்தில் பயணித்த சசிகலா!

 

காரை விட்டு இறங்கி பிரச்சார வாகனத்தில் பயணித்த சசிகலா!

சசிகலா இன்று காலை பெங்களூரு விடுதியில் இருந்து புறப்பட்டு தமிழகம் வந்து கொண்டிருந்தார். அப்போது சசிகலாவை வரவேற்கும் விதமாக அமமுகவினர் பேனர், கட் அவுட், போஸ்டர் உள்ளிட்டவற்றுடன் வரவேற்பதுடன் #TNwelcomesசின்னம்மா , #அதிமுகவை_மீட்போம் #StrongLeaderசின்னம்மா #WelcomeRajamadha என்ற ஹேஷ்டேக்குகளை ட்விட்டரில் ட்ரெண்டாக்கி அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். கர்நாடக தமிழக எல்லையில் மூன்று இடங்களில் அவருக்கு அமமுகவினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். ட்ரோன் மூலம் மலர் தூவியும் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. சசிகலா கட்சியிலிருந்து நீக்கப்பட்டதால அவர், அதிமுக கொடியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. அத்துணை எதிர்ப்புகளையும் மீறியும் தமிழக எல்லைக்குள் நுழைந்தார் சசிகலா.

காரை விட்டு இறங்கி பிரச்சார வாகனத்தில் பயணித்த சசிகலா!

இதனிடையே கிருஷ்ணகிரி அருகே காரில் வந்துக்கொண்டிருந்த சசிலகா ஓமதேபள்ளி என்ற இடத்தில் திடீரென காரை விட்டு இறங்கி பிரச்சார வாகனத்தில் ஏறினார், அப்போது அவர் அதிமுக துண்டை அணிந்திருந்தார். பிரச்சார வாகனத்தில் பயணத்தை தொடரும் சசிகலா தேசிய நெடுஞ்சாலை வழியாக சூளகிரி நோக்கி புறப்பட்டார். இதிலிருந்து அவர் அதிமுகவில் ஐக்கியமாக துணிந்துவிட்டார் என்பதும், தேர்தலில் பிரச்சாரத்தை தொடங்க தயாராக இருக்கிறார் என்பதும் தெரிகிறது. ஏராளமான காவல்துறையினர் புடைச்சூழ, பத்திரிக்கையாளர்கள் பின் தொடர நாடே எதிர்பார்த்த சசிகலாவின் வருகை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.