Home ஆன்மிகம் சஷ்டி என்றால் ஆறு, கவசம் என்றால் பாதுகாப்பு!

சஷ்டி என்றால் ஆறு, கவசம் என்றால் பாதுகாப்பு!

நோய், பில்லி சூன்யம், வறுமை, சந்தான விருத்தி சிக்கல், மனநலம், தீராத கவலைகள் உட்பட 6 வகையான கொடும் பிணிகளில் இருந்து கந்தன் மக்களை காக்கும் பாடலாக அது கொள்ளபட்டது.
அந்தக்காலத்தில் கொடிய நோய்கள் பரவும் நேரங்களில் வீடுகளிலும், கோயில்கள்களிலும் இந்த பாடலை பாடுவார்களாம்.
ஆழ்ந்த அர்த்தமுள்ள இப்பாடலானது கந்த சஷ்டி கவசமாகும். இப்பாடலின் ஒவ்வொரு வரியும், மனித உடலின் ஒவ்வொரு உறுப்பையும் அதன் இயக்கத்தையும் நோய் நொடியிலிருந்து காத்தருள ஒப்புவிக்கும் பாடலாகும்.

பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
கதிர்வேலிரண்டும் கண்ணினைக் காக்க
விதிசெவியிரண்டும் வேலவர் காக்க
நாசிகளிரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க
முப்பத்திருபல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க
கன்னமிரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங்கழுத்தை இனியவேல் காக்க
மார்பை ரத்தின வடிவேல் காக்க

ஒவ்வொரு உறுப்புக்கும் ஒவ்வொரு வேல் பெயரை சொல்லி காத்தருள வேண்டும் பாடல் இது. இந்த பாடல் வரிகளில், அறிவியல் உண்மையும் ஒளிந்திருக்கின்றது.
மனம் உருகி ஆழ்ந்த பக்தி நிலையில் இக்கவசத்தை சொல்லும்பொழுது ஒவ்வொரு உறுப்பாக சொல்லும்பொழுது அதில் கவனத்தை வைத்தால் உடல் தானாக அதை சரி செய்கின்றது என்கின்றது அறிவியல்.
உளவியல் ரீதியாக கொடுக்கும் உடல்நலம் இதுவாகும். நிரூபிக்கபட்ட உண்மையும் கூட. இதைத்தான் கந்த சஷ்டி கவசமும் சொல்கின்றது.

உச்சி முதல் பாதம் வரை ஒவ்வொன்றாக தியானித்து முருகனிடம் நலம்பெற சொல்லும் மருத்துவ ரீதியான தியான பாடலாக உள்ளது. இந்த பாடலில் அர்த்தமில்லாத சில வரிகள் வருவதாக தோன்றும். உண்மையில் அந்த வார்த்தைகள் அர்த்ததிற்கு அல்ல மாறாக சில அதிர்வுகளை கொடுப்பதற்காக‌ உள்ளது.

இப்பாடலில் சில இடங்களில் தமிழ் மொழியின் சில எழுத்துக்கள் மட்டும் இரட்டைப்படை மற்றும் ஒற்றைப்படை எண்களின் வரிசையில் அமைந்துள்ளது.

நம் தமிழ் புலவர்கள் ஞானமிக்கவர்கள். சித்தர்கள் சொன்ன நல்ல அதிர்வு, அதாவது தெய்வீகம் மற்றும் நேர்மறை சிந்தனையினை கொடுக்கும். சமஸ்கிருத வார்த்தைகளுக்கு சற்று ஒரு படி தூக்கலாகவே சரியான தமிழ் வார்த்தைகளை வைத்து இந்த பாடலை இயற்றியுள்ளார் தேவராயர்.

தேவராயரும் அதை மிக சரியாக செய்து நல் அதிர்வுகளை கொடுக்கும் வார்த்தைகளை இப்பாடலில் புகுத்தியிருக்கின்றார்.
நல் அதிர்வுகளை கொடுக்கும் கந்த சஷ்டி கவசம்!

உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், சிலருக்கு மெல்லிய மின்சார அதிர்வு கொடுப்பார்கள். அந்த அதிர்வினை சில வார்த்தைகளை முறையாக உச்சரித்தாலே உடலில் உற்சாகம் கூடும்.

ஓம் எனும் வார்த்தையினை ஓங்காரமாக சில நாழிகை இழுத்து ம்ம்ம்ம்ம்ம் என்பதை அழுத்தி சில நாழிகை இழுத்தாலே சில அதிர்வுகளை உணரமுடியும் என்பார்கள்.

ஆலய வழிபாட்டின் பொழுது வெண்கல மணி கொடுக்கும் அதிர்வும் அத்தகையதே.

அப்படியான வார்த்தைகள் பல கந்த சஷ்டி கவசத்தில் உண்டு, இதனால்தான் முருகன் ஆலயங்களில் அதை படிக்க வேண்டும் என்றார்கள்.

-வித்யா ராஜா

மாவட்ட செய்திகள்

Most Popular

விவசாய மசோதாக்கள்- கங்கையைப்போல தூய்மையான நோக்கம் கொண்டது – பிரதமர் வாக்குறுதி!

டெல்லியில் போராடும் விவசாயிகள் தவறாக வழிநடத்தப்படுவதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டி உள்ளார். வேளாண் சட்டங்கள் குறித்து வதந்திகள் பரப்படுவதாகவும் அவர் வேதனை தெரிவித்தார். வேளாண்மை சட்டங்கள் குறித்து அடிப்படை...

போதையில் ஆள்மாற்றி கொலை செய்த ஆசாமிகள்

ராமேஸ்வரம் துறைமுகம் பகுதியை சேர்ந்தவர்கள் முருகானந்தம்(39), சண்முகவேல்(40). இவர்களுக்கும் அதே பகுதியை சேர்ந்த வேலுச்சாமி என்பவருக்கும் முன் விரோதம் இருந்துள்ளது. இதனால் வேலுச்சாமியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு பயன் தரக்கூடியவை- பிரதமர் மோடி

வாரணாசிக்கு சென்ற பிரதமர் மோடி, காசி விஸ்வநாதர் ஆலய பூஜை - பிரதமர் மோடி பங்கேற்றார். காசி விஸ்வநாதருக்கு பிரதமரே நேரடியாக பூஜை செய்தார். தொடர்ந்து விஸ்வநாதர் ஆலயத்தில் நடைபாதை...

“நில விற்பனையில் மோசடி; அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு” – எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம்

ஈரோடு பெருந்துறை தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில், அரசின் அனுமதியின்றி பல நூறு ஏக்கர் நிலங்கள், விளை நிலங்கள் என்ற போர்வையில் வீட்டுமனைகள் ஆக்கப்பட்டு, விற்பனை...
Do NOT follow this link or you will be banned from the site!