எஸ்.பி.பி உடல்நிலை நேற்றைவிட இன்று சீராக உள்ளது: மகன் சரண்

 

எஸ்.பி.பி உடல்நிலை நேற்றைவிட இன்று சீராக உள்ளது: மகன் சரண்

50 ஆண்டு கால திரையுலக இசை பயணம் மூலம் கோடான கோடி ரசிகர்களை தன்வசம் கட்டிபோட்டு வைத்திருப்பவர் எஸ். பி. பாலசுப்ரமணியம். 16 இந்திய மொழிகளில் 40 ஆயிரம் பாடல்களை பாடியுள்ள அவர் இசை உலகின் ஓர் சகாப்தம் என்று கூட சொல்லலாம். இந்நிலையில் அவருக்கு கடந்த 5ஆம் தேதி கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகினது. அவருக்கு லேசான அறிகுறி இருப்பதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்றே தன் உடல்நிலை நலத்துடன் இருப்பதாகவும் லேசான அறிகுறி மட்டுமே இருப்பதாகவும் எஸ்.பிபி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர் நலமாக இருப்பதாகவும், அச்சப்பட தேவையில்லை என்றும் அவரது மகன் சரண் தெரிவித்துள்ளார். இதனிடையே எஸ்.பி சுப்பிரமணியமின் மனைவி சாவித்ரிக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

எஸ்.பி.பி உடல்நிலை நேற்றைவிட இன்று சீராக உள்ளது: மகன் சரண்
இந்நிலையில் எஸ்பிபி உடல்நிலை குறித்து அவரது மகன் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ என்னுடைய தந்தை வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்றைவிட இன்று அவரது உடல்நிலை சீராக உள்ளது. ஆனால் கொரோனாவிலிருந்து அவர் மீள்வதற்கு சில காலங்கள் ஆகும். மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் அவரின் உடல்நலம் மெல்ல மெல்ல தேறி வருகிறது. இதிலிருந்து அவர் மீண்டு வருவார். காலை முதல் பலர் எனக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டனர். அனைவருக்கும் தனித்தனியாக என்னால் பதில் கூற இயலாத ஒரு சூழல். அதனால் வீடியோ வாயிலாக இதனை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்யும் அனைவருக்கும் என் நன்றி” என தெரிவித்துள்ளார்.