சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக சஞ்சித் பேனர்ஜி? – கொலீஜியம் பரிந்துரை!

 

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக சஞ்சித் பேனர்ஜி? – கொலீஜியம் பரிந்துரை!

சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக சஞ்சித் பேனர்ஜியை கொலீஜியம் பரிந்துரை செய்திருக்கிறது.

தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவுள்ள ஏ.பி.சாஹி வரும் டிச.31ம் தேதி ஒய்வு பெறுகிறார். இந்த ஆண்டோடு அவரது பதவிக்காலம் முடிவடையவிருப்பதால், புதிய தலைமை நீதிபதியை தேர்வு செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சஞ்சித் பேனர்ஜியை புதிய தலைமை நீதிபதியாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன.

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக சஞ்சித் பேனர்ஜி? – கொலீஜியம் பரிந்துரை!

உச்சநீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய கொலீஜியத்தீப பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளும். அதனால், சஞ்சித் பேனர்ஜி கூடிய விரைவில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. கல்கத்தா, டெல்லி, ஒடிஷா என நாட்டின் மிக முக்கியமான நீதிமன்றங்களில் வழக்கறிஞராக பணியாற்றிய சஞ்சித் பேனர்ஜி, கல்கத்தா உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.