லாக்டவுனை நடைமுறைப்படுத்தியது மத்திய அரசு…. ஆனால் லாக்டவுனை தளர்த்தும் பொறுப்பு மாநிலங்களுக்கு… சிவ சேனா குற்றச்சாட்டு

லாக்டவுனை நடைமுறைப்படுத்தியது மத்திய அரசு…. ஆனால் லாக்டவுனை தளர்த்தும் பொறுப்பு மாநிலங்களுக்கு… சிவ சேனா குற்றச்சாட்டு

மகாராஷ்டிரா மாநிலம்தான் நாட்டிலேயே கொரோனா வைரஸால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் குறிப்பாக மும்பை கொரோனா வைரஸால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மும்பையில் கொரோனா வைரஸ் நெருக்கடி ஏற்பட்டதற்கு கடந்த பிப்ரவரியில் குஜராத்தில் நடத்தப்பட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரவேற்பு நிகழ்ச்சிதான் பொறுப்பு என சிவ சேனா புதிய குற்றச்சாட்டை கூறியுள்ளது.

லாக்டவுனை நடைமுறைப்படுத்தியது மத்திய அரசு…. ஆனால் லாக்டவுனை தளர்த்தும் பொறுப்பு மாநிலங்களுக்கு… சிவ சேனா குற்றச்சாட்டு

சிவ சேனாவின் ஊதுகுழலாக கருதப்படும் சாமனா பத்திரிகையில் சிவ சேனா எம்.பி. சஞ்சய் ரவுத் தனது கட்டுரையில் கூறியிருப்பதாவது: மத்திய அரசு எந்தவித திட்டமும் இல்லாமல் லாக்டவுனை நடைமுறைப்படுத்தியது ஆனால் தற்போது லாக்டவுன் தளர்த்தும் பொறுப்பை மாநிலங்களிடம் கொடுத்து விட்டது. எதிர்க்கட்சியான பா.ஜ.க. மகாராஷ்டிரா விகாஸ் அகாடி அரசாங்கத்தை வீழ்த்த முயற்சித்த போதிலும், அதற்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லை.

லாக்டவுனை நடைமுறைப்படுத்தியது மத்திய அரசு…. ஆனால் லாக்டவுனை தளர்த்தும் பொறுப்பு மாநிலங்களுக்கு… சிவ சேனா குற்றச்சாட்டு

ஏனெனில் அதன் உயிர்வாழ்வு ஆளும் 3 கூட்டணி கட்சிகளான சேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸின் நிர்பந்தம் ஆகும். குஜராத்தில் கொரோனா வைரஸ் பரவியதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை வரவேற்பதற்காக நடந்த பெரிய பொதுக்கூட்டம் என்பதை மறுக்க முடியாது. டிரம்புடன் வந்த பிரதிநிதிகள் மும்பை மற்றும் டெல்லி வந்தனர். இதுதான் வைரஸ் பரவ வழி வகுத்தது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி 24ம் தேதிதான் குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வந்தார். அதேசமயம் மார்ச் 20ம் தேதிதான் அம்மாநிலத்தில் ராஜ்கோட்டை சேர்ந்த ஒரு நபருக்கும், சூரத் நகரை சேர்ந்த பெண் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் இருப்பது உறுதிப்பட்டது குறிப்பிடத்தக்கது.