பீகார் லோக்கல் கட்சிகள் எங்களை கூட்டணிக்காக நாடுகிறார்கள்… சிவ சேனாவின் சஞ்சய் ரவுத்

பீகார் லோக்கல் கட்சிகள் எங்களை கூட்டணிக்காக நாடுகிறார்கள்… சிவ சேனாவின் சஞ்சய் ரவுத்

பீகார் சட்டப்பேரவை தேர்தலில் எங்க கட்சியுடன் கூட்டணி வைப்பதற்காக அம்மாநில கட்சிகள் நாடி வருகின்றன என சிவ சேனா எம்.பி. சஞ்சய் ரவுத் தெரிவித்தார்.

பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான பா.ஜ.க.-ஐக்கிய ஜனதா தள கூட்டணி அரசின் ஆயுட்காலம் அடுத்த மாதம் இறுதியில் முடிவுக்கு வருகிறது. ஆகையால் அம்மாநிலத்தில் புதிய அரசை மக்கள் தேர்நதெடுப்பதற்காக தேர்தல் நடத்தும் வேலைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இம்மாதம் 28ம் தேதி முதல் மொத்தம் 3 கட்டங்களாக தேர்தலை நடத்துகிறது.

பீகார் லோக்கல் கட்சிகள் எங்களை கூட்டணிக்காக நாடுகிறார்கள்… சிவ சேனாவின் சஞ்சய் ரவுத்
சஞ்சய் ரவுத்

பீகார் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பா.ஜ.க. உள்பட பல முக்கிய கட்சிகள் அனைத்தும் கூட்டணி முடிவு செய்து வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரச்சாரங்களை தொடங்கி விட்டன. இந்த சூழ்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்புதான் சிவ சேனா நாங்க அம்மாநில சட்டப்பேரவை தேர்தலில் 50 இடங்களில் போட்டியிடலாம் என தெரிவித்தது.

பீகார் லோக்கல் கட்சிகள் எங்களை கூட்டணிக்காக நாடுகிறார்கள்… சிவ சேனாவின் சஞ்சய் ரவுத்
பப்பு யாதவ்

சிவ சேனாவின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் ரவுத் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், சிவ சேனா 40 முதல் 50 இடங்களில் போட்டியிடலாம். இதுவரை கூட்டணி குறித்து யாரிடமும் பேசவில்லை. அடுத்த வாரம் நான் பாட்னா செல்கிறேன். பப்பு யாதவ் உள்ளிட்ட அம்மாநில லோக்கல் கட்சிகள் எங்களிடம் கூட்டணி குறித்து பேச விரும்புகின்றன என தெரிவித்தார்.