சரத் பவார், பிரதமர் மோடி சந்திப்பை அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கக்கூடாது.. சஞ்சய் ரவுத்

சரத் பவார், பிரதமர் மோடி சந்திப்பை அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கக்கூடாது.. சஞ்சய் ரவுத்

சரத் பவார், பிரதமர் மோடி சந்திப்பை அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கக்கூடாது என்று சிவ சேனா எம்.பி. சஞ்சய் ரவுத் தெரிவித்தார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் நடவடிக்கையில் தீவிரமாக உள்ளார். இந்த சூழ்நிலையில், நேற்று டெல்லியில் பிரதமர் மோடியை சரத் பவார் திடீரென சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நீடித்ததாக தகவல் வெளியானது. அரசியலில் எதிரும்,புதிருமாக இருக்கும் இரு தலைவர்கள் சந்தித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சரத் பவார், பிரதமர் மோடி சந்திப்பை அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கக்கூடாது.. சஞ்சய் ரவுத்
சிவ சேனா

சரத் பவார், பிரதமர் மோடி சந்திப்பை அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கக்கூடாது என்று சிவ சேனாவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சஞ்சய் ரவுத் தெரிவித்தார். இது தொடர்பாக சஞ்சய் ரவுத் கூறியதாவது: சரத் பவார் பிரதமரை சந்தித்திருந்தால் ஆச்சரியப்பட வேண்டிய அவசியமில்லை. பவார் சாஹிப்பும், மோடி ஜியும் ஒரு பழைய பிணைப்பை பகிர்ந்து கொள்கிறார்கள். அவர்கள் எப்போதும் ஒருவருக்கொருவர் ஆலோசிக்கிறார்கள்.

சரத் பவார், பிரதமர் மோடி சந்திப்பை அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கக்கூடாது.. சஞ்சய் ரவுத்
சஞ்சய் ரவுத்

பவார் சாஹிப் அவருடன் ஒரு பைல்லை வைத்திருப்பதை நான் புகைப்படங்களில் பார்த்தேன். அது வேளாண் அல்லது கூட்டுறவு தொடர்புடையதாக இருக்கலாம். நான் பவார் சாஹிப்பை எப்போது சந்திப்பேனோ, அப்போது அவருடன் பேசுவேன். அதில் (பிரதமர் மோடி, சரத் பவார் சந்திப்பு) எந்த அரசியலும் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.