“பெகாசஸ் ஒட்டுக்கேட்பு ஹிரோஷிமா அணுகுண்டு வீச்சுக்கு சமமானது” – பிரதமர் மோடியை வெளுத்து வாங்கிய சிவசேனா!

“பெகாசஸ் ஒட்டுக்கேட்பு ஹிரோஷிமா அணுகுண்டு வீச்சுக்கு சமமானது” – பிரதமர் மோடியை வெளுத்து வாங்கிய சிவசேனா!

பெகாசஸ் என்ற மென்பொருள் இன்று இந்தியாவையே புரட்டி போட்டிருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. அந்தளவிற்கு இந்தியர்களின் தரவுப் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. மத்திய அரசின் கயமைத்தனம் வெட்டவெளிச்சமாகி இருப்பதாக எதிர்க்கட்சிகள் கொந்தளித்து வருகின்றன. இஸ்ரேலைச் சேர்ந்த பெகாசஸ் எனும் ஸ்பைவேர் மூலம் இந்தியாவைச் சேர்ந்த பிரபலங்களின் போன்களை ஹேக் செய்து, அவர்களின் போன் கால்களை ஒட்டு கேட்கும் வேலை படுஜோராக அரங்கேறியிருக்கிறது.

“பெகாசஸ் ஒட்டுக்கேட்பு ஹிரோஷிமா அணுகுண்டு வீச்சுக்கு சமமானது” – பிரதமர் மோடியை வெளுத்து வாங்கிய சிவசேனா!
“பெகாசஸ் ஒட்டுக்கேட்பு ஹிரோஷிமா அணுகுண்டு வீச்சுக்கு சமமானது” – பிரதமர் மோடியை வெளுத்து வாங்கிய சிவசேனா!

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, தேர்தல் வியூகர் பிரசாந்த் கிஷோர், மத்திய ஐடி அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஜல்சக்தி துறை அமைச்சர் பிரஹலாத் சிங் படேல், முன்னாள் தேர்தல் ஆணையர் அசோக் லவாசா, மருத்துவ வல்லுநர் ககன்தீப் காங், உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார் அளித்த பெண், அவரின் உறவினர்கள் உள்ளிட்டோர் பெகாசஸால் பாதிக்கப்பட்டோர் பட்டியலில் உள்ளனர். இவர்களின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளன. இதில் முழுக்க முழுக்க மத்திய அரசின் தலையீடு இருப்பதாக காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.

“பெகாசஸ் ஒட்டுக்கேட்பு ஹிரோஷிமா அணுகுண்டு வீச்சுக்கு சமமானது” – பிரதமர் மோடியை வெளுத்து வாங்கிய சிவசேனா!

இச்சூழலில் சிவசேனாவின்ன அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவில் அக்கட்சி எம்பியான சஞ்சய் ராவத் கட்டுரை எழுதியுள்ளார். அதில் அவர், “பெகாசஸ் மென்பொருள் மூலம் அரசியல் கட்சித் தலைவர்கள், எதிர்க்கட்சியினர் சமூக ஆர்வலர்கள், மத்திய அமைச்சர்கள், பத்திரிகையாள்கள் என 1,500 பேர் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. சர்வதேச ஊடகங்கள் செய்தியின்படி, ஒரு லைசன்ஸ் மூலம் 50 செல்போன்களை ஒட்டுக் கேட்க முடியும். அதற்கு ஆண்டுக்கு 80 லட்சம் டாலர்கள் செலுத்த வேண்டும்.

இந்தியாவில் 300 செல்போன்கள் ஒட்டுக்கேட்கப்பட்டதென்றால், குறைந்தபட்சம் 4.80 கோடி டாலர்கள் (357 கோடி ரூபாய்) 2019ஆம் ஆண்டு செலவிடப்பட்டிருக்க வேண்டும். யாருடைய கணக்கிலிருந்து இந்தப் பணம் செலவிடப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக முழுமையாக விசாரணை நடக்குமா? ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டுவிற்கும், பெகாசஸ் விவகாரத்துக்கும் எந்தவிதமான வேறுபாடும் இல்லை. ஹிரோஷிமாவில் மக்கள் கூட்டம் கூட்டமாக இறந்தார்கள். பெகாசஸ் விவகாரத்தில் உயிராக நினைக்கும் சுதந்திரம் கொல்லப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.