‘பள்ளி வகுப்பறைகளில் சானிடைசர்’ – பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் பேட்டி!

 

‘பள்ளி வகுப்பறைகளில் சானிடைசர்’ – பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் பேட்டி!

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக அனைத்து பள்ளி வகுப்பறைகளிலும் சானிடைசர் வைக்கப்பட்டிருப்பதாக பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்தார்.

‘பள்ளி வகுப்பறைகளில் சானிடைசர்’ – பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் பேட்டி!

பொதுத்தேர்வு எழுதவிருக்கும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், ஷெனாய் நகரில் உள்ள அரசு பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் ஆய்வு செய்தார். பள்ளிகளில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘பள்ளி வகுப்பறைகளில் சானிடைசர் வைக்கப்பட்டுள்ளன. கல்வி வளாகங்களை தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு வைட்டமின், ஜிங்க் மாத்திரைகள் வழங்கப்படும்’ என தெரிவித்தார்.

‘பள்ளி வகுப்பறைகளில் சானிடைசர்’ – பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் பேட்டி!

பல்வேறு தடைகளுக்கு பிறகு, நாளை 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டே பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவித்த அரசு, மாணவர்களின் பாதுகாப்பில் தனி கவனம் செலுத்துகிறது. ஆந்திர மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு ஏரளாமான மாணவர்களும் ஆசிரியர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டது போன்ற சம்பவம் தமிழகத்திலும் நடைபெறாத வண்ணம் தடுக்க தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இத்தகைய சூழலில், பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டிருக்கிறார்.