ராகுல் காந்தி போட்டி நிறுவனங்களால் சிப்பாயாக பயன்படுத்தப்படுகிறார்.. பதிலடி கொடுத்த பா.ஜ.க

 

ராகுல் காந்தி போட்டி நிறுவனங்களால் சிப்பாயாக பயன்படுத்தப்படுகிறார்.. பதிலடி கொடுத்த பா.ஜ.க

ராகுல் காந்தி நடந்து கொள்ளும் விதத்தை பார்க்கையில், போட்டி நிறுவனங்களால் அவர் சிப்பாயாக பயன்படுத்துகிறார் என்று சொன்னால் மிகையாகாது என்று பா.ஜ.க. தெரிவித்துள்ளது.

2012ம் ஆண்டில் பிரான்ஸிமிருந்து 126 ரபேல் போர் விமானங்களை வாங்க அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசாங்கம் ஒப்பந்தம் மேற்கொண்டது. ஆனால் 2014ம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்தது. அதற்கு பதிலாக 2016ம் ஆண்டில் மொத்தம் ரூ.59 ஆயிரம் கோடியில் 36 ரபேல் போர் விமானங்களை வாங்க பிரான்ஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தம் மேற்கொண்டது.

ராகுல் காந்தி போட்டி நிறுவனங்களால் சிப்பாயாக பயன்படுத்தப்படுகிறார்.. பதிலடி கொடுத்த பா.ஜ.க
ரபேல் போர் விமானம்

பா.ஜ.க.வின் ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாக காங்கிரசும், ராகுல் காந்தியும் பல ஆண்டுகளாக குற்றம் சாட்டி வந்தனர். ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் ரபேல் ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என மோடி அரக்கு உச்ச நீதிமன்றம் நற்சான்றிதழ் வழங்கியது. இந்நிலையில் ரபேல் ஒப்பந்தத்துக்காக இந்தியாவை சேர்ந்த இடைத்தரகர் ஒருவருக்கு ரூ.9 கோடி லஞ்சம் வழங்கப்பட்டதாக தகவல் வெளியானது. மேலும் ரபேல் ஒப்பந்த முறைகேடு குறித்து விசாரிக்க பிரான்சில் ஒரு தனி நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளதாக மீடியாபர்ட் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டு இருந்தது.

ராகுல் காந்தி போட்டி நிறுவனங்களால் சிப்பாயாக பயன்படுத்தப்படுகிறார்.. பதிலடி கொடுத்த பா.ஜ.க
பிரதமர் மோடி

இந்த செய்தியை குறிப்பிட்டு, ரபேல் போர் விமானங்களை வாங்குவதில் ஊழல் பற்றிய உண்மையை கண்டுபிடிக்க ஒரே வழி, ரபேல் ஒப்பந்தம் குறித்து கூட்டு நாடாளுமன்ற குழு விசாரணை நடத்த வேண்டும் என்றும், பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. இதற்கு பா.ஜ.க. பதிலடி கொடுத்துள்ளது. பா.ஜ.க.வின் செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா இது தொடர்பாக கூறியதாவது: காங்கிரஸ் பொய்கள் மற்றும் கட்டுக்கதைகளுக்கு ஒத்ததாக இருக்கிறது. இன்று அவர்கள் ரபேல் ஒப்பந்தத்தை பற்றி மீண்டும் பொய் சொன்னார்கள்.

ராகுல் காந்தி போட்டி நிறுவனங்களால் சிப்பாயாக பயன்படுத்தப்படுகிறார்.. பதிலடி கொடுத்த பா.ஜ.க
சம்பித் பத்ரா

ஒரு நாட்டின் (பிரான்ஸ்) தன்னார் தொண்டு நிறுவனம் (ஷெர்பா) ஒரு குற்றச்சாட்டுக்கு எதிராக புகார் அளித்தால், அதன் நிதி வழக்கு விசாரணைக்கு ஏற்ப விசாரணைக்கு உத்தரவிட்டால் அது ஊழலாக கருதப்படக்கூடாது. ராகுல் காந்தி நடந்து கொள்ளும் விதத்தை பார்க்கையில், போட்டி நிறுவனங்களால் ஒரு சிப்பாயாக பயன்படுத்தப்படுகிறார் என்று சொன்னால் மிகையாகாது. அவர் இந்த பிரச்சினையின் ஆரம்பத்தில் இருந்தே பொய் சொன்னார். அநேகமாக அவர் ஒரு ஏஜெண்டாக செயல்படுகிறார் அல்லது காந்தி குடும்பத்தை சேர்ந்த ஒருவர் போட்டி நிறுவனத்தில் இருந்திருக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.