அயோத்தி கோயிலில் நிறுவும் ராமர் சிலைக்கு மீசை இருக்க வேண்டும்… சம்பாஜி கோரிக்கை

அயோத்தி கோயிலில் நிறுவும் ராமர் சிலைக்கு மீசை இருக்க வேண்டும்… சம்பாஜி கோரிக்கை

ஸ்ரீ சிவப்பிரதிஷன் இந்துஸ்தான் அமைப்பின் தலைவராக இருப்பவர் சாம்பாஜி பைதே. அவர் அயோத்தி கோயிலில் நிறுவப்படும் ராமர் சிலைக்கு மீசை இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக சாம்பாஜி பைதே செய்தியாளர்களிடம் கூறியதாவது: நீங்கள் நிறுவ உள்ள ராம் மற்றும் லட்சுமணன் சிலையில் மீசை இருக்க வேண்டும் என கோவிந்த் கிரிஜி மஹராஜிடம் (ராமர் கோயில் டிரஸ்டின் அறங்காவலர்) நான் கேட்டுக்கொள்கிறேன்.

அயோத்தி கோயிலில் நிறுவும் ராமர் சிலைக்கு மீசை இருக்க வேண்டும்… சம்பாஜி கோரிக்கை

நீங்கள் இந்த தவறை சரிசெய்யவில்லை என்றால் (ராமர் சிலையில் மீசை இல்லை) என்னை போன்ற ராம பக்தருக்கு, கோயில் கட்டப்பட்டாலும், அது பயனில்லை. ராமர் கோயில் கட்டுமான பூமி பூஜை மேற்கொள்வதற்கு முன்னதாக, அந்த இடத்தில் சத்ரபதி சிவாஜி மஹாராஜ் உருவ படத்தை வைத்து வழிபட வேண்டும். ஆகஸ்ட் 5ம் தேதியன்று நடைபெறும் பூமி பூஜை நிகழ்ச்சியை தீபாவளி, தசரா போன்று மக்கள் கொண்டாட வேண்டும்.

அயோத்தி கோயிலில் நிறுவும் ராமர் சிலைக்கு மீசை இருக்க வேண்டும்… சம்பாஜி கோரிக்கை

கோயில் கட்டுவது கோவிட்-19 தொற்றுநோயை ஒழிக்க உதவும் என சிலர் நினைக்கிறார்கள் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் பேசியது குறித்து கேள்விக்கு, மூத்த அரசியல்வாதி, ஒரு மரியாதைக்குரிய நபர் அந்த அறிக்கையை வெளியிட்டிருக்கக்கூடாது. உண்மையில் அவர் (சரத் பவார்) அழைக்கப்படாவிட்டாலும் கூட பூமி பூஜை விழாவுக்கு செல்ல வேண்டும். அவர் அங்கு முழு மகாராஷ்டிராவையும் பிரதிநிதித்துவப்படுத்துவார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.