சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நாளை சிறப்பு பூஜை ரத்து!

 

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நாளை சிறப்பு பூஜை ரத்து!

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நாளை சிறப்பு பூஜை ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஓர் ஆண்டில் வரும் மூன்று அமாவாசைகள் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது புரட்டாசி மகாளய அமாவாசை, தை, ஆடி அமாவாசை ஆகிய மூன்று அமாவாசைகள் பக்தர்களால் வழிபாட்டுக்கு உரிய நாளாக இருந்து வருகிறது. இதில் மகாளய அமாவாசையன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நாளை சிறப்பு பூஜை ரத்து!

இதனால் ஆண்டுதோறும் கோயில் குளக்கரைகள்,நதிக்கரைகளில் திதி தர்ப்பணம் செய்தும், மக்கள் நீராடியும் வருகின்றனர். ஆனால் இந்தாண்டு கொரோனா தொற்று காரணமாக நதிக்கரைகளில் தர்ப்பணம் கொடுக்கவும், நீராடவும் தடை விதிக்கப்பட்டு வருகிறது.

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நாளை சிறப்பு பூஜை ரத்து!

இந்நிலையில் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மகாளய அமாவாசையை முன்னிட்டு நாளை சிறப்பு பூஜை ரத்து செய்யப்பட்டுள்ளது. கோவிலில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி இல்லை என்றும் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் முடிக் காணிக்கை காலை 5.30 மணி முதல் 6 மணி வரை அனுமதிக்கப்படுவர் என்றும் இணை ஆணையர் மகேஷ்குமார் தெரிவித்துள்ளார்.