கள நிலவரத்தை பொறுத்தே சென்னையில் சலூன் கடைகள் திறக்க அனுமதி- தமிழக அரசு தகவல்

 

கள நிலவரத்தை பொறுத்தே சென்னையில் சலூன் கடைகள் திறக்க அனுமதி- தமிழக அரசு தகவல்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வரும் நிலையிலும், நான்காம் கட்ட ஊரடங்கு போடப்பட்ட போது 34 வகையான கடைகளுக்கு அரசு அனுமதி அளித்தது. மக்களின் நிலையை கருத்தில் கொண்டு அந்த கடைகளுக்கு அனுமதி அளித்த அரசு, விதித்த கட்டுப்பாடுகளுடன் தான் செயல்பட வேண்டும் என்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கையை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தியது. அதன் படி, அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு விட்டன.

கள நிலவரத்தை பொறுத்தே சென்னையில் சலூன் கடைகள் திறக்க அனுமதி- தமிழக அரசு தகவல்

அதனைத்தொடர்ந்து கடந்த 24 ஆம் தேதி முதல் நகர்ப்புற பகுதிகளில் சலூன் கடைகள் மற்றும் பியூட்டி பார்லர்கள் இயங்க அரசு அனுமதி அளித்தது. ஆனால் கொரோனா அதிகமாக இருக்கும் சென்னையில் மட்டும் சலூன் கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை. இந்நிலையில், சலூன்களை திறக்கக்கோரி முடித்திருத்துவோர் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கு விசாரணையின் போது, சென்னையில் கள நிலவரங்களை ஆய்வு செய்த பிறகு சலூன் கடைகள் திறக்க அனுமதி வழங்க முடியும் என்றும் பிற இடங்களில் திறக்கப்பட்டு விட்டதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதனை கேட்டுக் கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜூன் 8 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளனர்.