சேலத்தில் 9 தொகுதிகளில் அதிமுக கூட்டணி முன்னிலை!

 

சேலத்தில் 9 தொகுதிகளில் அதிமுக கூட்டணி முன்னிலை!

சேலம்

சேலம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 11 சட்டன்ற தொகுதிகளில், அதிமுக கூட்டணி 9 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.

சேலம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள், 4 இடங்களில் எண்ணப்பட்டு வருகிறது. தற்போது 2-வது சுற்றுக்கள் முடிவடைந்து 3, 4ஆம் சுற்றுக்கள் எண்ணப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரத்தின் படி, 9 தொகுதிகளில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் முன்னிலை வகித்து வருகின்றன.

சேலத்தில் 9 தொகுதிகளில் அதிமுக கூட்டணி முன்னிலை!

அதன்படி, எடப்பாடி, சேலம் தெற்கு, ஆத்தூர், கெங்கவல்லி, வீரபாண்டி, ஏற்காடு, ஓமலூர் ஆகிய 7 தொகுதியில் அதிமுக வேட்பாளர்களும், சேலம் மேற்கு மற்றும் மேட்டூர் தொகுதிகளில் பாமக வேட்பாளர்களும் முன்னிலை வகித்து வருகின்றனர்.

எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 4-வது சுற்றின் முடிவில் திமுக வேட்பாளரை விட சுமார் 14 ஆயிரம் வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். இதேபோல், சேலம் வடக்கு மற்றும் சங்ககிரி சட்டமன்ற தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் முன்னிலை வகித்து வருகின்றனர்.