சேலம் அரசு மருத்துவமனையில் படுக்கைகள் தட்டுப்பாடு… ஆம்புலன்சில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகள்…

சேலம் அரசு மருத்துவமனையில் படுக்கைகள் தட்டுப்பாடு… ஆம்புலன்சில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகள்…

சேலம்

படுக்கை வசதி தட்டுப்பாடு காரணமாக சேலம் அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் வாகனங்களில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

சேலம் மாவட்ட அரசு தலைமை மருததுவமனையில் உள்ள கொரோனா வார்டில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 800 படுக்கைகள் உள்ளன. இந்த நிலையில், மாவட்டத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 650-க்கும் மேலாக அதிகரித்து உள்ளது. இதனால், படுக்கைகள் முழுமையாக நிரம்பி உள்ளதால், புதிதாக சிகிச்சைக்கு வருவோருக்கு இடம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

சேலம் அரசு மருத்துவமனையில் படுக்கைகள் தட்டுப்பாடு… ஆம்புலன்சில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகள்…

இந்த நிலையில், தனியார் மருத்துவமனைகளில் நிலவும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக அங்கு சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகள், சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். அங்கு படுக்கை வசதி இல்லாத நிலையில், அவர்களுக்கு ஆம்புலன்ஸ் வாகனங்களிலேயே சிகிச்சை அளிக்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது. இதன்படி, 4-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்களில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சேலம் அரசு மருத்துவமனையில் படுக்கைகள் தட்டுப்பாடு… ஆம்புலன்சில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகள்…

ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த ஒரு நோயாளியும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து, சேலம் அரசு மருத்துவமனையில் கூடுதலாக 200 படுக்கை வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மருததுவமனை நிர்வகாம் தெரிவித்து உள்ளது. இதற்கு ஒரு வார காலம் ஆகும் என்றும் கூறப்பட்டுள்ளது.