50 சதவீத சிறப்பு தள்ளுபடியில் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் பதிப்புத் துறை சார்பில் நூல்கள் விற்பனை

 

50 சதவீத சிறப்பு தள்ளுபடியில் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் பதிப்புத் துறை சார்பில் நூல்கள் விற்பனை

தமிழ் பல்கலைக்கழக துணை வேந்தர் முனைவர் கோ பாலசுப்பிரமணியம் அவர்கள் நூல்கள் விற்பனையை துவக்கி வைத்தார்

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் பதிப்புத் துறை சார்பில் 50 சதவீத சிறப்பு தள்ளுபடியில் நூல்கள் விற்பனை செய்யப்பட்டன. தமிழ் பல்கலைக்கழக துணை வேந்தர் முனைவர் கோ பாலசுப்பிரமணியம் அவர்கள் நூல்கள் விற்பனையை துவக்கி வைத்தார்

50 சதவீத சிறப்பு தள்ளுபடியில் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் பதிப்புத் துறை சார்பில் நூல்கள் விற்பனை

உலகமெல்லாம் தமிழ் முழக்கம் செய்திடுவோம் என்னும் வகையில் தமிழன் பன்முகத் கூறுகளையும் ஆய்ந்தறிந்து தமிழ் உலகுக்கு வெளிப்படுத்துதல் என்னும் முதன்மை குறிக்கோளினை தமிழ் பல்கலைக்கழகம் பதிப்புத் துறை வாயிலாக பழந்தமிழ் இலக்கியங்களையும் அறிஞர்கள் ஆகிய ஆய்வுகளையும் வெளியிடுவதன் வழித் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இதுவரை பதிப்புத் துறையின் வாயிலாக வெளியிட்ட நூல்களின் எண்ணிக்கை 509 ஆகும். தற்போது விற்பனையில் 258 நூல்கள் உள்ளது. தஞ்சை அரண்மனை வளாகத்தில் இயங்கி வந்த பதிப்புத் துறை அலுவலகம் மற்றும் விற்பனைப் பிரிவு வாகை வளாகத்தில் உள்ள முதன்மை கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு இயங்கி வருகிறது.

ஆண்டுதோறும் தமிழ் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட நாள் மற்றும் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் நாளிலும் தமிழ் புத்தாண்டினை முன்னிட்டு பதிப்புத்துறை நூல்கள் 50% சிறப்பு கழிவு விலையில் விற்பனை செய்வது வழக்கம். சென்றாண்டு தமிழ் பல்கலைக்கழகத்தின் தொடக்க நாளில் இரண்டு லட்சத்து எழுபத்தி ஐயாயிரம் ரூபாய்க்கு நூல்கள் விற்பனையானது அதேபோல் தமிழ் புத்தாண்டுக்கு இரண்டு லட்சத்து இருபத்தி ஐயாயிரம் ரூபாய்க்கு நூல்கள் விற்பனையானது இந்த ஆண்டு நூல்கள் விற்பனை 5 லட்சம் ரூபாய் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

50 சதவீத சிறப்பு தள்ளுபடியில் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் பதிப்புத் துறை சார்பில் நூல்கள் விற்பனை

இந்த வாய்ப்பினை மாணவர்களும் ஆய்வாளர்களும் தமிழ் அறிஞர்களும் பொதுமக்களும் பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் கோ பாலசுப்பிரமணியம் அவர்கள் கேட்டுக்கொண்டார் இந்த விற்பனையை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் கோ பாலசுப்பிரமணியம் அவர்கள் துவக்கி வைத்தார் பதிவாளர் முனைவர் சின்னப்பன் பதிப்புத்துறை இயக்குனர் முனைவர் சி தியாகராஜன் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் அலுவலர்கள் மற்றும் ஆய்வு மாணவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.