வாகனங்கள் மூலம் உழவர் சந்தை விலைக்கு 106 வகையான காய்கறிகள்,பழங்கள் விற்பனை!

 

வாகனங்கள் மூலம் உழவர் சந்தை விலைக்கு 106 வகையான காய்கறிகள்,பழங்கள் விற்பனை!

தமிழகத்தில் ஒரு வாரம் முழுக்க தளர்வுகளற்ற ஊரடங்கு அமலுக்கு வந்ததால் மளிகை,காய்கறி,இறைச்சி மற்றும் மது கடைகள் மூடப்பட்டன மக்களுக்கு தேவையான காய்கறி, பழங்கள் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து வாகனம் மூலம் தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கடைகள் மூடப்பட்டுள்ளதால் 4, 380 வாகனங்கள் மூலம் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்ய தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது . சென்னையில் ஆயிரத்து 610 வாகனங்கள் மூலமும் தினமும் ஆயிரத்து 160 டன் காய்கறிகள் காலை 6 மணி முதல் 12 மணி வரை விற்பனைசெய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வாகனங்கள் மூலம் உழவர் சந்தை விலைக்கு 106 வகையான காய்கறிகள்,பழங்கள் விற்பனை!

தமிழகத்தின் மற்ற பகுதிகளில் 2770 வாகனங்கள் மூலம் 2728 மெட்ரிக் டன் காய்கறிகள் விற்பனை செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மே 31 வரை உள்ளாட்சி அமைப்புகள் மூலமாகவும் காய்கறிகள் பழங்கள் விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். கோவையில் வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை தொடங்கி வைத்த அமைச்சர் சக்கரபாணி, வாகனங்கள் மூலம் உழவர் சந்தை விலைக்கு 106 வகையான காய்கறி பழங்கள் விற்கப்படும் என்றும் தனியாரும் விரும்பினால் வாகனங்களில் காய்கறி விற்க அனுமதி தரப்படும் என்றும் கூறியுள்ளார்.

வாகனங்கள் மூலம் உழவர் சந்தை விலைக்கு 106 வகையான காய்கறிகள்,பழங்கள் விற்பனை!

நின்சாகார்ட், வே கூல், பழமுதிர் நிலையம், தமிழ்நாடு வாழை உற்பத்தியாளர் இணையம், அஹிம்சா விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனம் போன்ற நிறுவனங்கள் இதில் இணைந்துள்ளன.
தமிழகத்தில் காய்கறிகள் மற்றும் பழங்கள் விநியோகம் தொடர்பான தகவல் தெரிந்து கொள்ள 044 2225 3884 என்ற தொலைபேசி எண்ணை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.