‘சம்பளம் குறைப்பு’ ஸ்விக்கி ஊழியர்கள் போராட்டம்

 

‘சம்பளம் குறைப்பு’ ஸ்விக்கி ஊழியர்கள் போராட்டம்

கொரோனா நோய்த் தொற்று 2019 ஆம் வருட டிசம்பர் மாதத்திலிருந்து உலகையே அச்சுருத்தி வருகிறது. இதனால் பாதிப்படைவோர் எண்ணிக்கை நாள்தோறும் அதிகத்த வண்ணம் இருக்கின்றன. கொரோனா நோய்த் தொற்றால் எல்லாத் தொழில்களுமே முடங்கி விட்டன. தொழிலகங்கள் திறந்தாலும் தொழிலாளர்கள் வேலைக்கு வர முடியாத நிலை. ஆயினும் உணவகங்களில் பார்சல் மட்டும் அளிக்க அரசு அனுமதி அளித்தது. இதனால், பலரும் ஹோட்டலுக்கு வந்து பார்சல் வாங்கிச் சென்றனர்.

‘சம்பளம் குறைப்பு’ ஸ்விக்கி ஊழியர்கள் போராட்டம்

கொரோனா காரணமாக பல்வேறு தொழில் நிறுவனங்களும் தங்கள் ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பைக் காரணம் காட்டி அங்கு பணி செய்யும் ஊழியர்களின் சம்பளத்தைக் குறைத்துக் கொடுத்து வருகின்றன. கொரோனா பரவல் அதிகமாக இருக்கும் வேளையிலும் தங்கள் உயிருக்கு ஆபத்து இருக்கும் நிலையிலும், வாடிக்கையாளர்களின் வீட்டுக்கு நேரடியாகச் சென்று உணவு டெலிவரி செய்கின்றனர் ஸ்விக்கி மற்றும் ஸொமொட்டோ போன்ற ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களின் தொழிலாளர்கள்.

‘சம்பளம் குறைப்பு’ ஸ்விக்கி ஊழியர்கள் போராட்டம்

கொரொனா தொற்று அதிகமானதும் ஸ்விக்கி போன்ற ஆன்லைன் டெலிவரி நிறுவனங்கள் உணவு மட்டுமல்லாது காய்கறிகள், பழங்கள், மளிகைப் பொருள்கள் என பல்வேறு பொருட்களை விநியோகிக்கும் முடிவுக்கு வந்தன. அதனால், அங்கு வேலை பார்ப்பவர்களின் வேலை சுமை கூடியது. ஆயினும் இம்மாதிரியான இக்கட்டான சூழலில் இந்தப் பணியை ஒரு சேவையைப் போல செய்துவந்தனர்.

ஆனால் ஸ்விக்கி நிறுவனம் பணிபுரியும் தொழிலாளர்களின் சம்பளத்தைக் குறைத்துள்ளது. நிர்வாகத்தின் இந்த முடிவு தொழிலாளர்களுக்கு கடும் அதிர்ச்சியை அளித்தது. இதனால் அதிருப்தியடைந்த திருச்சி ஸ்விக்கி ஊழியர்கள் தில்லைநகரில் உள்ள் ஸ்விக்கி நிறுவனத்திற்கு எதிராக கூட்டமாக நின்று தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். முன்னதாக இது சம்மந்தமாக நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.