கொரோனாவின் இரண்டாம் அலையில் சிக்காமலிருக்க சில டிப்ஸ்

 

கொரோனாவின் இரண்டாம் அலையில் சிக்காமலிருக்க சில டிப்ஸ்

இந்த கொரோனா இரண்டாம் அலை வீசும்  காலத்தில் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாப்பாக பார்த்துக்கொள்வது உங்கள் கடமை. கீழ்கண்ட 5 வழிகள் மூலம் உங்களை நீங்கள் ஆரோக்கியமாகவும் ஃபிட்டாகவும் வைத்துக்கொள்ளலாம்.

கொரோனாவின் இரண்டாம் அலையில் சிக்காமலிருக்க சில டிப்ஸ்

தூக்கம்

தூக்கம் உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?  நோயெதிர்ப்பு சக்தி  மற்றும் இருதய ஆரோக்கியத்தை தூக்கமின்மை மோசமாக பாதிக்கிறது. ஒருவர் ஆரோக்கியமாகவும் ஃபிட்டாகவும் இருக்க குறைந்தது 8 மணிநேரம்  தூங்குவது   அவசியம்.

மருத்துவ பரிசோதனை

ஒரு மாதத்திற்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனைகளைப் பெறுவது உங்களுக்கு நன்மை பயக்கும். ஏனென்றால் உடலில் ஏதேனும் மோசமான நோய் ஏதும் இருந்தால், நீங்கள் அதை ஆரம்ப நிலையிலேயே அறிந்து கொள்ளலாம் .இதன் விளைவாக விரைவாக சிகிச்சையளிக்க முடியும்.

உடற்பயிற்சி

ஒருவர் ஆரோக்கியமாகவும் ஃபிட்டாகவும் இருக்க உடற்பயிற்சி மிக முக்கியம். . தினசரி  உடற்பயிற்சி செய்வது  உடலை  மேம்படுத்துகிறது மற்றும் மனச்சோர்வை எதிர்த்துப் போராட உதவுகிறது. உங்கள் தினசரி பழக்கவழக்கங்களில்  10 நிமிடங்களை நடைப்பயணத்திற்கு ஒதுக்கவும்.

தண்ணீர் குடிக்கவும்

உடல் சரியாக செயல்பட நீர்  தேவைப்படுகிறது. . இந்த கோடையில் வெள்ளரிகள், தர்பூசணி, மாம்பழம் போன்ற பழங்களில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. இந்த பழங்களில் உள்ள நீர் சத்து  மூளைக்கும், உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றுவதற்கும் இன்றியமையாதது.

காலை உணவு

தினமும்  ஆரோக்கியமான காலை உணவுடன் உங்கள் நாளைத் தொடங்குங்கள். ஏனெனில் இது உங்கள் மனநிலையையும் ஆற்றலையும் சீராக அமைக்கிறது. சரியான ஆரோக்கியமான காலை உணவு உங்கள் உடலுக்கு உகந்த மன மற்றும் உடல் செயல்திறனைத் தூண்டும். நிலையான இரத்த சர்க்கரை அளவையும் ஆரோக்கியமான எடையும் பராமரிப்பதில் காலை உணவு முக்கிய பங்கு வகிக்கிறது.

மேற்கண்ட குறிப்புகளுடன் ,யோகாசனம் சூரிய நமஸ்காரம் போன்றவைகளையும் செய்து வந்தால் இந்த கொரானாவின் இரண்டாம் அலையில் சிக்காமல் தப்பிக்கலாம்

கொரோனாவின் இரண்டாம் அலையில் சிக்காமலிருக்க சில டிப்ஸ்