‘அழிவின் விளிம்பில் கோவில்கள்’ : பக்தர்களிடம் ஒப்படைக்க சத்குரு வலியுறுத்தல்!

 

‘அழிவின் விளிம்பில் கோவில்கள்’ : பக்தர்களிடம் ஒப்படைக்க சத்குரு வலியுறுத்தல்!

கோவில்களை பாதுகாக்க பக்தர்களிடம் ஒப்படைக்க வேண்டுமென ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 11,999 கோவில்கள் ஒரு கால பூஜைகூட நிகழாமல் அழிந்து வருகின்றன. 34,000 கோவில்கள் 10,000க்கும் குறைவான வருட வருவாயுடன் போராடுகின்றன. 37,000 கோவில்களில் பூஜை, பராமரிப்பு, பாதுகாப்பிற்கு ஒருவர் மட்டுமே உள்ளார். கோவில்களை பக்தர்களிடம் விடுங்கள். தமிழக கோவில்களை விடுவிக்கும் நேரமிது என பதிவிட்டுள்ளார். அதில் முதல்வர் பழனிசாமி, மு.க ஸ்டாலின் மற்றும் ரஜினிகாந்த்தை டேக் செய்திருக்கிறார். இதனுடன் சேர்த்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார்.

‘அழிவின் விளிம்பில் கோவில்கள்’ : பக்தர்களிடம் ஒப்படைக்க சத்குரு வலியுறுத்தல்!

அந்த வீடியோவில், மாநிலங்களின் அடையாளம் கோவில்கள். ஆன்மாவான கோவில்கள் அரசாங்கத்திடம் அகப்பட்டு கிடக்கிறது. 300 ஆண்டுகளுக்கு முன் கிழக்கிந்திய கம்பேனி தங்க, வைர நகைகளை திருடுவதற்காக கோவில்களை கைப்பற்றினர். பேராசையுடன் கைப்பற்றப்பட்ட அந்த கோவில்கள், சுதந்திரம் கிடைத்து 74 ஆண்டுகள் ஆன பிறகும் அதே நிலையில் இருக்கின்றன. 37 ஆயிரம் கோவில்களில் பூஜை, வழிபாடுகள் செய்ய முடியவில்லை என இந்து அறநிலையத்துறை நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தது.

தற்போது வரை கோவில்கள் பாழடைந்து கிடக்கின்றன. மக்களிடம் அதை கொடுத்தால் உயிருக்கும் மேலாக பாதுகாப்பார்கள். நம் நாட்டில் எல்லா மதங்களுக்கும் சுதந்திரம் இருக்கும் போது கோவில்களுக்கு மட்டும் ஏன் அடிமைத்தனம். இந்த தலைமுறையின் போது நாம் கோவில்களை பாதுகாக்கவில்லை என்றால், அடுத்த 50 அல்லது 100 வருடங்களில் கோவில்கள் அழிந்து விடும். தேர்தலில் நீங்கம் ஜெயிக்க மக்களுக்கு இந்த உறுதியை அளிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். சத்குருவின் இந்த கருத்தை நடிகர் சந்தானம், உள்ளிட்ட பலர் வழிமொழிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.