துணை முதல்வர் பதவியிலிருந்து சச்சின் பைலட் நீக்கம்! – காங்கிரஸ் அறிவிப்பு

 

துணை முதல்வர் பதவியிலிருந்து சச்சின் பைலட் நீக்கம்! – காங்கிரஸ் அறிவிப்பு

ராஜஸ்தான் மாநில துணை முதல்வர் பதவியிலிருந்து சச்சின் பைலட் நீக்கப்படுவதாக காங்கிரஸ் கட்சி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான அரசில் துணை முதல்வராக இருந்து வருகிறார் சச்சின் பைலட். கடந்த சட்டமன்ற தேர்தலில் சச்சின் பைலட் தான் முதல்வராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அசோக் கெலாட் முதல்வர் பதவியை தக்கவைத்துக் கொண்டார். சச்சினை சமாதானம் செய்ய அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது.

துணை முதல்வர் பதவியிலிருந்து சச்சின் பைலட் நீக்கம்! – காங்கிரஸ் அறிவிப்பு
மத்தியப் பிரதேசத்தில் ஜோதிராதித்ய சிந்தியா பா.ஜ.க பக்கம் சென்றதை போல, சச்சின் பைலட்டும் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதை போல கட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். தன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களை அழைத்துக் கொண்டு ஹரியானா சென்றார் பைலட். தற்போது ஆட்சியைத் தக்க வைக்க 102 எம்.எல்.ஏ-க்கள் உள்ள நிலையில், சச்சின் பைலட்டை துணை முதல்வர்

துணை முதல்வர் பதவியிலிருந்து சச்சின் பைலட் நீக்கம்! – காங்கிரஸ் அறிவிப்புபதவியிலிருந்து நீக்க வேண்டும், கட்சியிலிருந்தும் நீக்க வேண்டும் என்று இன்று நடந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கட்சித் தலைவர் ரண்தீப் சிங் சுர்ஜிவாலா, சச்சின் பைலட் துணை முதல்வர் பதவியிலிருந்து நீக்கப்படுவதாக அறிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியிலிருந்தும் அவர் நீக்கப்படுகிறார். புதிய தலைவராக கோவிந்த் சிங் நியமிக்கப்படுவதாக அவர் அறிவித்துள்ளார்.