கார்த்திகை மாத பிறப்பையொட்டி சபரிமலைக்கு மாலை அணிந்த பக்தர்கள்

கார்த்திகை மாத பிறப்பையொட்டி சபரிமலைக்கு மாலை அணிந்த பக்தர்கள்

கார்த்திகை மாதம் முதல் நாளான இன்று தமிழகம் முழுவதும் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

கார்த்திகை மாத பிறப்பையொட்டி சபரிமலைக்கு மாலை அணிந்த பக்தர்கள்

கார்த்திகை மாத பிறப்பையொட்டி திண்டுக்கல் மலையடிவார ஐயப்பன் கோயில், வெள்ளை விநாயகர் கோயில் உள்ளிட்ட கோவில்களில் அதிகாலை முதலே குவிந்த பக்தர்கள், சபரிமலைக்கு மாலை அணிந்து விரத்தை தொடங்கினர். வழக்கமாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரும் நிலையில் கொரோனா காரணமாக குறைவான எண்ணிக்கையில் பக்தர்கள் வந்திருந்தனர்.

கார்த்திகை மாத பிறப்பையொட்டி சபரிமலைக்கு மாலை அணிந்த பக்தர்கள்

கோவையில் பிரசித்தி பெற்ற சித்தாபுதூர் ஐயப்பன் கோயிலில் கார்த்திகை மாத பிறப்பையொட்டி மூலவர் ஐயப்பன் விக்கிரகத்துக்கு பால், தயிர், நெய் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து மாலை அணிந்த குருசாமிகள், கன்னிசாமிகளுக்கு மாலை அணிவித்து விரதத்தை தொடங்கினர்.

கார்த்திகை மாத பிறப்பையொட்டி சபரிமலைக்கு மாலை அணிந்த பக்தர்கள்

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் கொரோனா ஊரடங்கு காரணமாக அக்னி தீர்த்த கடலில் நீராடவும், கோயிலுக்கு பூஜை பொருட்களை கொண்டு வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஐயப்ப பக்தர்கள் தங்கள் கைகளில் கொண்டு வந்த துளசி மாலைகளை குருசாமி மூலமாக அணிவித்து தங்களின் கார்த்திகை விரதத்தை துவங்கினர்.

கார்த்திகை மாத பிறப்பையொட்டி சபரிமலைக்கு மாலை அணிந்த பக்தர்கள்

ஈரோட்டில் கார்த்திகை மாத பிறப்பையொட்டி, அதிகாலை முதலே கோயில்களில் திரண்ட ஐய்யப்ப பக்தர்கள் சுவாமியை வழிபட்டு துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். கொரோனா ஊரடங்கு காரணமாக குறைந்த அளவிலான பக்தர்களே வருகை தந்ததாக குரு சுவாமிகள் தெரிவித்தனர்.