சாத்தான்குள வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் எல்லாரும் விசாரிக்கப்படுவார்கள் – சிபிசிஐடி ஐஜி சங்கர்

 

சாத்தான்குள வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் எல்லாரும் விசாரிக்கப்படுவார்கள் –  சிபிசிஐடி ஐஜி சங்கர்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் உயிரிழந்த விவகாரத்தில் சிபிசிஐடி, விசாரணையைக் கையிலெடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் கைது செய்யப்பட்ட நிலையில் எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், முத்து ராஜ், சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஆகியோர் மீது கொலை வழக்குப் பதியப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

சாத்தான்குள வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் எல்லாரும் விசாரிக்கப்படுவார்கள் –  சிபிசிஐடி ஐஜி சங்கர்

இதனையடுத்து இந்த இரட்டை கொலை வழக்கு வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர்களைத் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துமாறு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விரிவான தீர்ப்பு பின்னர் வழங்கப்படும் என்று கூறி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர். இதைத் தொடர்ந்து சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 3 பேருக்கு ஜூலை 16 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டனர்.

இதனிடையே தந்தை, மகன் கொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணையை சிபிசிஐடி தீவிரப்படுத்தியது. இந்த நிலையில் தூத்துக்குடியில் பேட்டியளித்த ஐஜி சங்கர், சாத்தான்குளம் கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரும் விசாரிக்கப்படுவார்கள் என்றும் கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என விசாரணை செய்து வருகிறோம் என்றும் விசாரணைக்கு பிறகே வேறு சிலரைக் கைது செய்வது பற்றித் தெரிய வரும் என்றும் கூறினார்.