விஜய் என்றாலே வெற்றிதான்! ஆனால் அவர் சாதி இதுதான்… பொதுவெளியில் போட்டு உடைத்த எஸ்.ஏ.சந்திரசேகர்

 

விஜய் என்றாலே வெற்றிதான்! ஆனால் அவர் சாதி இதுதான்… பொதுவெளியில் போட்டு உடைத்த எஸ்.ஏ.சந்திரசேகர்

‘ஒயிட் லேம்ப் புரொடக்சன்ஸ்’ தயாரிப்பில் அந்தோணிசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சாயம்’. விஜய் விஷ்வா கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் சைனி கதாநாயகியாக நடித்துள்ளார். பொன்வண்ணன், போஸ் வெங்கட், சீதா, இளவரசு, தென்னவன், செந்தி, எலிசெபத், பெஞ்சமின் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

விஜய் என்றாலே வெற்றிதான்! ஆனால் அவர் சாதி இதுதான்… பொதுவெளியில் போட்டு உடைத்த எஸ்.ஏ.சந்திரசேகர்

படிக்கும் மாணவர்கள் மீது சாதி சாயம் பூசுவதால் அவன் வாழ்க்கையே எப்படி திசை மாறுகிறது என்பதை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை சாலிகிராம்த்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குனர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், ஆர்.வி.உதயகுமார், சாய்ரமணி, ஜாக்குவார் தங்கம், நடிகர் போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் எஸ்.ஏ.சந்திர சேகர், “மாணவர்களிடம் சாதி சாயம் பூசக்கூடது என்பதை வலியுறுத்தும் விதமாக இந்தப்படம் எடுக்கப்பட்டுள்ளது. சமூகத்திற்கு பயன்தரும் விதமான படங்களை எடுப்பவர்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். ஜாதியை ஒழிப்பதற்கு நாம் நமது வாழ்க்கையில் பிராக்டிகலாக என்ன செய்திருக்கிறோம்..? என் மகன் விஜய்யை பள்ளியில் சேர்க்கும்போது விண்ணப்பத்தில் மதம், சாதி என்ற இடத்தில் தமிழன் என்று குறிப்பிட்டேன். முதலில் ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள். பள்ளியை மூடும் அளவுக்கு போராட்டம் நடத்துவேன் என கூறியதும், அமைதியாக ஒப்புக்கொண்டனர். அப்போதிருந்து விஜய்யின் சான்றிதழில் சாதி என்ற இடத்தில் தமிழன் என்றுதான் தொடர்ந்து வருகிறது. சாதிக்கு நாம் தான் முக்கியத்துவம் கொடுக்கிறோம்.. நாம் நினைத்தால், இதுபோல பள்ளியில் சேர்க்கும்போதே சாதியை குறிப்பிடாமல் தவிர்த்தால் இன்னும் இருபது வருடங்களில் சாதி என்கிற ஒன்றே இல்லாமல் போய்விடும்.

விஜய் என்றாலே வெற்றிதான்! ஆனால் அவர் சாதி இதுதான்… பொதுவெளியில் போட்டு உடைத்த எஸ்.ஏ.சந்திரசேகர்

விஜய் என்று சொன்னாலே ஒரு அதிர்வு ஏற்படும். பாலிவுட் கதாசிரியர் சலீம் ஜாவேத் தனது கதையின் ஹீரோக்களுக்கு குறிப்பாக அமிதாப்பின் படங்களில் ஹீரோக்களுக்கு விஜய் என்றுதான் பெயர் வைப்பார். அதேபோல் நானும் எனது படங்களின் நாயகர்களுக்கு விஜய் என்றுதான் பெயர் வைப்பேன். அதனால் தான் எனது மகனுக்கும் விஜய் என பெயர் வைத்தேன். விஜய் என்றால் வெற்றி என்று அர்த்தம்” எனக் கூறினார்.