இந்திய மாணவர்களின் கல்வி பாதிக்காமல் இருக்க… ரஷ்யப் பல்கலைக்கழகங்கள் அதிரடி நடவடிக்கை!

 

இந்திய மாணவர்களின் கல்வி பாதிக்காமல் இருக்க… ரஷ்யப் பல்கலைக்கழகங்கள் அதிரடி நடவடிக்கை!

கொரோனா பாதிப்பால் இந்தியாவிலேயே தங்கி இருக்கும் மாணவர்களின் கல்வி பாதிக்காமல் இருக்க ரஷ்யப் பல்கலைக்கழகங்கள் நடவடிக்கை எடுத்துள்ளது.

கொரோனா பெருந்தொற்று பாதுகாப்பு நடவடிக்கையாக பல்வேறு நாடுகளுக்கிடையேயான விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், ரஷ்யப் பல்கலைக்கழகங்களில் படிக்கும் இந்திய மாணவர்கள் இங்கேயே தங்கியுள்ளனர். அவர்களது மருத்துவக் கல்வி பாதிக்காத வகையில் ரஷ்யப் பல்கலைக்கழகங்கள், இந்திய மருத்துவ கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் உடன் கூட்டு ஒப்பந்தம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளன.

இந்திய மாணவர்களின் கல்வி பாதிக்காமல் இருக்க… ரஷ்யப் பல்கலைக்கழகங்கள் அதிரடி நடவடிக்கை!

இது தொடர்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அதிகாரிகள், டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல மருத்துவ கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளுடன் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளன. தற்போது அமலில் இருக்கும் கட்டுப்பாடுகள் முடிந்து மாணவர்கள் ரஷ்யாவுக்கு திரும்பும்போது அவர்கள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டியது அவசியம். நடப்பாண்டு மாணவர் சேர்க்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆகஸ்டு 1ஆம் தேதி இணையதளத்தில் மெய்நிகர் கல்வி கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்திய மாணவர்களின் கல்வி பாதிக்காமல் இருக்க… ரஷ்யப் பல்கலைக்கழகங்கள் அதிரடி நடவடிக்கை!

ஏற்கனவே 2021ஆம் ஆண்டுக்கான பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு மாணவர் சேர்க்கை தொடங்கிவிட்டன. கொரோனோ கட்டுப்பாடுகள் தொடரும் வரை மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடைபெறும். தற்போதைய சூழலில் நீட் தேர்வு முடிவுகள் எப்போது வெளிவரும் என்பது தெரியாததால் நீட் மதிப்பெண் சான்றிதழ் கேட்கப்படாது. எனினும் அதன் மதிப்பெண் சான்றிதழ் வந்த பிறகு மதிப்பெண் பட்டியலை வழங்க வேண்டும்.

இந்திய மாணவர்களின் கல்வி பாதிக்காமல் இருக்க… ரஷ்யப் பல்கலைக்கழகங்கள் அதிரடி நடவடிக்கை!

உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது ரஷ்யாவில் மருத்துவ கல்விக்கான செலவு மிக குறைவாக உள்ளது. ரஷ்ய அரசு வழங்கும் மானியத்தால் இந்திய மாணவர்களுக்கான இருக்கை எண்ணிக்கை 3 ஆயிரத்திலிருந்து 5 ஆயிரமாக உயர்ந்துள்ளது. ரஷ்யாவில் இருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவ பல்கலைக் கழகங்கள் உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ரஷ்ய பல்கலைக்கழகங்களில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் ஆகஸ்ட் 1ஆம் தேதி அன்று நடைபெறவுள்ள கல்வி கண்காட்சி பற்றிய விவரங்களுக்கு 9282221221 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களைக் கேட்டறியலாம். www.rusedufair.com என்ற இணையதளத்திலும் விவரங்களை அறியலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.