தடுப்பு மருந்து உற்பத்தியை தொடங்கியது ரஷ்யா!

 

தடுப்பு மருந்து உற்பத்தியை தொடங்கியது ரஷ்யா!

ரஷ்யா அறிமுகம் செய்த கொரோனா தடுப்பு மருந்தான ‘ஸ்புட்னிக் v’ இன் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கொரோனா தடுப்பு மருந்தினை அறிமுகம் செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் உலக நாடுகளிடையே போட்டி நிலவும் நிலையில் ரஷ்யா ‘ஸ்புட்னிக் v’ என்ற கொரோனா தடுப்பு மருந்தினை அறிமுகம் செய்தது. அதிபர் புதின் தனது மகளுக்கு அந்த மருந்தினை செலுத்தினார். இதனிடையே முழுமையாக பரிசோதனையை முடிக்காமலேயே அவசர அவசரமாக ரஷ்யா இந்த மருந்தினை அறிமுகம் செய்திருப்பதாக சர்ச்சைகள் நிலவுகின்றன. இந்த சூழலில் ரஷ்யா முன்னரே கூறிய படி முதல்கட்ட தடுப்பு மருந்து உற்பத்தியை தொடங்கியுள்ளது.

தடுப்பு மருந்து உற்பத்தியை தொடங்கியது ரஷ்யா!

ரஷ்யா தயாரித்து வெளியிட்டுள்ள ‘ஸ்புட்னிக் v’ என்ற கொரானா தடுப்பூசி தயாரிப்பில் நிறைய விதி மீறல்கள் நடைபெற்றுள்ளதாகவும் ,இது எதிர்காலத்தில் பல பக்க விளைவுகளை நோயாளிகளுக்கு உண்டாக்குமென்றும் அந்நாட்டு பேராசிரியர் டாக்டர் அலெக்சாண்டர் குற்றஞ்சாட்டியிருந்தார். அந்த தடுப்பூசி தயாரித்து மூன்றாம் கட்ட சோதனைக்கு உட்படுத்தாமல் அவசர அவசரமாக உலகில் முதன் முதலில் தடுப்பூசியை தாங்கள்தான் தயாரித்தோம் என்று பெயரெடுக்க ரஷ்யாவின் திட்டமிது என்றும் அவர் கூறினார்.