5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்!

 

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்!

தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமல்படுத்தப்படுவதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்தார்.

தமிழகம், கேரளா, அசாம், மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களிலும் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்காக ஒவ்வொரு மாநிலமாக சென்று ஆய்வு மேற்கொண்ட இந்திய தலைமை தேர்தல் ஆணையம், 5 மாநிலங்களிலும் தேர்தல் தேதியை அறிவிக்க தயாராக இருக்கிறது. அதற்கான கூட்டம் டெல்லியில் மாநில தேர்தல் ஆணையர்களுடன் நடைபெற்று வருகிறது.

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்!

கூட்டத்தில் பேசிய இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, கொரோனா அச்சுறுத்தல் கருதி முன்னெச்சரிக்கையுடன் தேர்தல் நடத்தப்படும். கொரோனா காலத்தில் பீகாரில் சட்டப்பேரவை தேர்தல் நடத்துவது மிகவும் சவாலாக இருந்தது. பீகார் தேர்தலில் முந்தைய தேர்தல்களை விட அதிக அளவு 57 சதவீதம் வாக்குகள் பதிவாகின. கொரோனா பாதிப்பு குறைவாக இருந்தாலும் சுகாதாரத்துறை மூலம் பிரச்சனைகளை சமாளித்து வருகிறோம். தேர்தலை நடத்துவதில் மருத்துவர்கள், செவிலியர்கள், அதிகாரிகளுக்கு பெரும் பங்கு உள்ளது என்று கூறினார்.

மேலும், சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமல்படுத்தப்படுகிறது என்றும் வாக்காளர்களின் பாதுகாப்பு மிக மிக அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.