கட்டுப்பாடுகளை கடுமையாக்கப் பரிந்துரை.. முதல்வருடனான ஆலோசனைக்கு பின் மருத்துவக் குழு பேட்டி!

 

கட்டுப்பாடுகளை கடுமையாக்கப் பரிந்துரை.. முதல்வருடனான ஆலோசனைக்கு பின் மருத்துவக் குழு பேட்டி!

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 1,974 கொரோனா உறுதி செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44,661 அதிகரித்துள்ளது. இந்திய அளவில் தமிழகத்தில் தான் குறைந்த அளவில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் கட்டுப்பாடு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் பழனிசாமி மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

கட்டுப்பாடுகளை கடுமையாக்கப் பரிந்துரை.. முதல்வருடனான ஆலோசனைக்கு பின் மருத்துவக் குழு பேட்டி!

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவ குழு நிபுணர் குகானந்தம், தற்போது தமிழகத்தில் உச்சத்தை எட்டியிருக்கும் கொரோனா பாதிப்பு இனிமேல் குறையும் என்றும் பாதிப்பு அதிகமாக இருக்கும் சென்னையில் கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் படி முதல்வரிடம் பரிந்துரைத்ததாகவும் தெரிவித்தார். மேலும், அடுத்த 3 மாதங்களுக்கு பிறகு கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கும் என்பதால் மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்துமாறு எங்களின் கோரிக்கையை ஏற்று அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தலைவலி, காய்ச்சல் வந்தால் மக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம் என்றும் தமிழகத்தில் 75,000 படுக்கை வசதிகள் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.