வழிபாட்டுத் தலங்கள் நாளை திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

 

வழிபாட்டுத் தலங்கள் நாளை திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் அமல்படுத்தப்பட்ட 7 ஆம் கட்ட ஊரடங்கு இன்றுடன் முடிகிறது. அதனால் இதனை நீடிப்பது குறித்து 2 நாட்களுக்கு முன்னர் முதல்வர் பழனிசாமி ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை மேற்கொண்டார். அந்த ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவுகள் நேற்று வெளியாகின. அப்போது, மக்களின் நிலையை கருத்தில் கொண்டு வழிபாட்டு தலங்கள், மால்கள், பேருந்துகள், படப்பிடிப்பு உள்ளிட்ட அனைத்தும் நாளை முதல் இயங்க அரசு அனுமதி அளித்தது. ஆனால் ரயில் சேவை, பள்ளிகள் கல்லூரிகள், தியேட்டர்கள் இயங்க தடை தொடரும் என அறிவிக்கப்பட்டது.

வழிபாட்டுத் தலங்கள் நாளை திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

அதன் படி நாளை முதல் செயல்பட உள்ள வழிபாட்டு தலங்கள், பேருந்துகள், மால்கள் உள்ளிட்டவற்றில் கிருமிநாசினி தெளித்து தூய்மைபடுத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வழிபாட்டுத் தலங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு அரசாணையாக வெளியிட்டுள்ளது.

வழிபாட்டுத் தலங்கள் நாளை திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

அதில் வழிபாட்டு தலங்களில் 6 அடி தனிமனித இடைவெளி பின்பற்ற வேண்டும், 8 மணி வரை மட்டுமே வழிபட அனுமதிக்கப்படும், சிலைகள் சிற்பங்கள் புனித நூல்களை பக்தர்கள் தொட அனுமதிக்க கூடாது, கிருமிநாசினி கொண்டு அடிக்கடி தூய்மை படுத்த வேண்டும், கட்டாயம் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும், 65 வயதுக்கு மேற்பட்டவர்களும் 10 வயதுக்கு உட்பட்டவர்களும் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.